வரலாற்றுச் சாதனை: சிங்கப்பூர், இந்தியா இடையே ஓராண்டில் மட்டும் 5.5 மில்லியன் பேர் விமானப் பயணம்

1 mins read
8bbdf649-b3d1-40fc-995a-f6b8037849c9
சிங்கப்பூரில் இருந்து இந்தியாவின் முக்கியமான பல நகரங்களுக்கு ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: சிங்கப்பூர், இந்தியா இடையே கடந்த ஓராண்டில் மட்டும், வரலாற்றுச் சாதனையாக, 5.5 மில்லியன் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவின் முக்கியமான பல நகரங்களுக்கு ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சாங்கி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 16 நகரங்களுக்கு வாரந்தோறும் 280 விமானங்கள் இயக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவுடன் மிக அதிகமான போக்குவரத்து உள்ள விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் விளங்குகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே இயக்கப்படும் விமானங்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என பல நிறுவனங்களின் விமானங்கள் அடங்கும்.

பல்வேறு காரணங்களுக்காக, இரு நாடுகளுக்கு இடையே ஏராளமானோர் பயணம் மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக, கல்வி, மருத்துவம், சுற்றுலா ஆகிய காரணங்களுக்காக பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இரு நாடுகளில், கடந்த 2019ஆம் ஆண்டைவிட, விமானப் பயணிகளின் எண்ணிக்கை 15% அதிகரித்துள்ளது.

அதேபோல் 2023ஆம் ஆண்டைவிட 12 விழுக்காட்டு அளவு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, 55 மில்லியனாக உயர்ந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய வரவேற்பைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள ஜெய்ப்பூர், லக்னோ, சூரத் உள்ளிட்ட மேலும் பல நகரங்களுக்கு நேரடி விமானச் சேவையை விரிவுபடுத்த சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்