கடந்த நிதி ஆண்டில் சீனப் பொருள்களின் இறக்குமதி குறைந்தது

கடந்த நிதி ஆண்டில் சீனப் பொருள்களின் இறக்குமதி குறைந்தது

1 mins read
3b9e9279-b2a4-4c09-ab08-22a33b74a16e
கைப்பேசி இறக்குமதி குறைந்து, ஏற்றுமதி அதிகரித்தது. - கோப்புப் படம்: இக்கனாமிக் டைம்ஸ்

புதுடெல்லி: சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருள்கள் 2024-25ஆம் நிதி ஆண்டில் வீழ்ச்சி கண்டதாக நாடாளுமன்றத்தில் வர்த்தக, தொழில் துறை அமைச்சர் ஜித்தின் பிரசாதா தெரிவித்துள்ளார்.

முந்திய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட எல்லாத் துறைகளின் பொருள்களும் அந்த நிதி ஆண்டில் குறைவாக இறக்குமதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

வேதிப்பொருள்கள், உரம், இரும்பு மற்றும் எஃகு போன்ற துறைகளைச் சேர்ந்த பொருள்களின் இறக்குமதி வெகுவாகக் குறைந்தது.

குறிப்பாக, கைப்பேசிகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது அடிமட்டத்தைத் தொட்டது.

பத்தாண்டுகளுக்கு முன்பு, 2014-15 நிதி ஆண்டில் ₹48,609 கோடிக்கு கைப்பேசிகள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2024-25ஆம் ஆண்டில் ₹3,710 கோடிக்கு அது இறங்கியது.

மாறாக, கைப்பேசி ஏற்றுமதி ஏற்றம் கண்டது. பத்தாண்டுகளுக்கு முன்னர், ₹1,566 கோடி மதிப்புள்ள கைப்பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2024-25 நிதி ஆண்டில் அது ₹205,017 கோடிக்கு அதிகரித்ததாக அமைச்சர் பிரசாதா கூறினார்.

குறிப்புச் சொற்கள்