வரும் 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் குழந்தைகள் எண்ணிக்கை 350 மில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நல்வாழ்வு, உரிமைகளை உறுதி செய்ய மோசமான பருவநிலை, சுற்றுச்சூழல் அபாயங்கள் போன்ற முக்கியமான சவால்களைக் கையாள வேண்டும் என்று யுனிசெஃப்பின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியா, தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 106 மில்லியன் குழந்தைகள் குறையும் காணும் என்றாலும், உலகக் குழந்தைகள் தொகையில் 15 விழுக்காட்டை இந்தியா கொண்டிருக்கும். சீனா, நைஜீரியா, பாகிஸ்தானுடன் இந்தப் பொறுப்பை இந்தியா பகிர்ந்துகொள்ளும். ‘மாறிவரும் உலகில் குழந்தைகளின் எதிர்காலம்’ என்ற யுனிசெஃப்பின் உலகின் குழந்தைகள் நிலை குறித்த 2024ஆம் ஆண்டின் அறிக்கை புதன்கிழமை புதுடெல்லியில் வெளியிடப்பட்டது.
அறிக்கை மூன்று உலகளாவிய மூன்று முக்கியப் போக்குகளைச் சுட்டியது. மக்கள்தொகை மாற்றங்கள், பருவநிலை நெருக்கடிகள், குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் முன்னணி தொழில்நுட்பங்களை ஆகியவை அவை.
வரும் 2050களில், குழந்தைகள் மோசமான பருவநிலை, சுற்றுச்சூழல் அபாயங்களை எதிர்கொள்வார்கள். 2000ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிகமான குழந்தைகள் கடுமையாய வெப்ப அலைகளுக்கு ஆளாக நேரிடும் என்று அறிக்கை சுட்டிக்காட்டியது.
உலகளவில் ஏறக்குறைய ஒரு பில்லியன் குழந்தைகள் ஏற்கெனவே அதிக ஆபத்தான பருவநிலை அபாயங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், குழந்தைகளுக்கான பருவநிலை ஆபத்துக் குறியீட்டில் இந்தியா 26வது இடத்தில் உள்ளது.
இந்தியக் குழந்தைகள் கடுமையான வெப்பம், வெள்ளம், காற்றுத் தூய்மைக்கேடு ஆகியவற்றால் கடுமையான அபாயங்களை எதிர்கொள்கின்றனர், குறிப்பாக கிராமப்புறத்திலும் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களிலும் வாழும் குழந்தைகள்.
பருவநிலை நெருக்கடிகள் அவர்களின் உடல்நலம், கல்வி, தண்ணீர் போன்ற அத்தியாவசிய ஆதாரங்களைப் பெறுவதில் விகிதாசாரமாக பாதிக்கும் என்று அறிக்கை கணித்துள்ளது.