புதுடெல்லி: நேப்பாளம்-திபெத் எல்லைகளையொட்டியுள்ள தனது இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகளைக் கண்காணிக்கும் பணிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.
அண்மையில் பனிப்பாறை உடைந்ததால் நேப்பாளத்தில் ஏற்பட்ட பேரழிவு ஏற்படுத்திய வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேப்பாளப் பெருவெள்ளத்தில் ஏறத்தாழ 3,000 பேரைக் காணவில்லை என்றும் 633 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த பனிப்பாறைச் சரிவுக்கான துல்லியமான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றபோதிலும், பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் பனிப்பாறைகள் உருகி வருவதால் இத்தகைய பேரிடர் ஆபத்துகள் அதிகரித்து வருகின்றன.
இது குறித்து இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலப் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மதன் கௌஷிக் கூறுகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
“அண்டை நாடான நேப்பாளத்துடன் உத்தராகண்ட் எல்லையைப் பகிர்ந்து கொள்வதாலும் அதே போன்ற நிலவியல் சூழலைக் கொண்டிருப்பதாலும் உத்தராகண்ட்டில் உள்ள அனைத்துப் பனிப்பாறைகளையும் அறியப்பட்ட பனிப்பாறை ஏரிகளையும் தொடர்ந்து கண்காணிக்குமாறு தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், உத்தராகண்ட் மாநிலத்தில் எங்காவது இதுபோன்றதொரு ஆபத்தான சூழல் உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை அம்மாநில மீட்புக் குழுவினர் விழிப்புடன் கண்காணித்து வருவதாகவும் அவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.


