இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு: உலகச் சந்தையில் தேவை தொடர்ந்து உயா்வு

இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு: உலகச் சந்தையில் தேவை தொடர்ந்து உயா்வு

படம்: தினமணி

26 Oct 2026 - 5:53 pm

1 mins read

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி, 13 விழுக்காடு வரை அதிகரித்து, சாதனை அளவாக ரூ.54,937 கோடியை எட்டியுள்ளது.

டெல்லியில் ‘பாரத அனைத்துலக அரிசி மாநாடு’ நடைபெற்று வருகிறது. இதில் 150க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தேவ்காந்த், உலகச் சந்தையில் பிற போட்டி நாடுகளான தாய்லாந்து, மியன்மாருடன் ஒப்பிடுகையில் இந்திய அரிசியின் விலை ஏறக்குறைய பத்து விழுக்காடு குறைவாக இருப்பதாகத் தெரிவித்தார்.

தரமான அரிசியைக் குறைந்த விலைக்கு விற்பதால் உலக அளவில் இந்திய அரிசிக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 சாகுபடி காலத்தில் இந்தியாவில் மொத்தம் 154 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்கு பெரிய அளவில் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை என்பது ஏற்றுமதியாளர்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகப் பாசுமதி அரிசி ஏற்றுமதியில் தற்காலிகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பாசுமதி அரிசியில் 74 விழுக்காடு மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் நிலையில், அங்கு விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால் அரிசியின் விலையும் சற்று உயர்ந்து வருகிறது.

இம்மாநாட்டில் இந்திய ஏற்றுமதியாளர்கள் ஏறக்குறைய 200 வகையான அரிசி ரகங்களைக் காட்சிப்படுத்தினர்.

குறிப்புச் சொற்கள்
அரிசிஏற்றுமதிதாய்லாந்துமியன்மார்சாதனை