புதுடெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) வரலாற்றில் இதுவரை இல்லாத அடிமட்டத்தைத் தொட்டது.
காலையில் வர்த்தகம் தொடங்கியதும், ஓர் அமெரிக்க டாலருக்கு 84.80 ரூபாய் என்று வீழ்ச்சி கண்டது.
கடந்த வாரம் 84.7575 என்று பாதாளத்திற்குச் சென்ற இந்திய ரூபாயின் மதிப்பு செவ்வாய்க்கிழமை மேலும் இறங்கியது.
ஆறாண்டுகளுக்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) புதிய ஆளுநர் அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.
2018 டிசம்பர் முதல் ஆளுநராக இருந்து வந்த சக்திகாந்த தாஸ் செவ்வாய்க்கிழமையுடன் ஓய்வு பெற்றதால், அந்தப் பொறுப்பில் சஞ்சய் மல்ஹோத்ரா என்பவர் நியமிக்கப்பட்டார்.
புதன்கிழமை புதிய ஆளுநராகப் பதவி ஏற்க உள்ளார். இந்தியாவின் நிதிக் கொள்கையில் அவர் மாற்றங்களைச் செய்வதற்கான சாத்தியம் இருப்பதாக உலக முதலீட்டு வங்கியான நோமுரா தெரிவித்து உள்ளது.