தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப் வரிவிதிப்பால் தள்ளாடும் இந்திய இறால் ஏற்றுமதி

2 mins read
98b1c99c-2024-457f-9b36-62407428ed84
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் புறநகர்ப் பகுதியில் இயங்கும் இறால் பதனிடும் தொழிற்சாலை. - படம்: ராய்ட்டர்ஸ்

கனபவரம் (இந்தியா): அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்த விரிவிதிப்பால் இந்தியாவின் இறால் ஏற்றுமதி அதிகம் பாதிக்கப்படும் என்று அங்குள்ள வர்த்தகர்கள் கவலைப்படுகின்றனர்.

அமெரிக்காவுக்கு அதிகமாக இறால் ஏற்றுமதி செய்வோர் 2,000 கொள்கலன்கள் அளவுள்ள இறால் தேங்கக்கூடும் என்று அஞ்சுகின்றனர்.

புதிய வரிவிதிப்பால் இந்தியாவின் இறால் ஏற்றுமதித் தொழில் 26 விழுக்காட்டு வரியை எதிர்கொள்கிறது.

US$7 பில்லியன் (S$9.2 பில்லியன்) மதிப்பிலான கடலுணவு ஏற்றுமதிச் சந்தை பெரும்பாலும் அமெரிக்காவில் கிளை பரப்பி உள்ள வால்மார்ட், குரோகர் போன்ற பேரங்காடிகளைப் பெரிதும் சார்ந்து உள்ளது.

இறாலை வாங்குவோர் விலைகளை மறுபரிசீலனை செய்வதால் அந்தத் தொழிலுக்கு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இறால் ஏற்றுமதியாளர்கள் வரி விதிப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து, வாங்கும் விலையை பத்து மடங்கு குறைத்துவிட்டார்கள்.

அத்துடன் நிச்சயமற்ற நிலையும் நீடிப்பதால் இறாலுக்கான தேவை சரிந்துவிட்டதாக இறால் பண்ணை நடத்துவோர் சோகத்தில் உள்ளனர்.

இந்தியாவின் தெற்குக் கடலோர மாநிலமான ஆந்திராவில் தமது பண்ணையில் உணவு அளித்து இறாலை வளர்த்து வரும் எஸ்.வி.எல். பதி ராஜு, 63, என்பவர் தம்மைப் போன்ற இறால் விவசாயிகள் பேரிழப்பைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

“விலை சரிந்துவிட்டதால் அதற்கு யாரிடம் சென்று தீர்வு காண்பது என்று தெரியாமல் விழிக்கிறோம்,” என்றார் அவர்.

ஆந்திராவின் தொலைதூர கனபவரம் கிராமத்தில் அவரைப் போன்ற ஏராளமான இறால் பண்ணையாளர்கள் உள்ளனர். அந்தத் தொழிலை நம்பி அங்கு பலநூறு குடும்பங்கள் உள்ளன.

இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் US$5 பில்லியன் மதிப்புள்ள இறால்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவற்றில் US$2.4 பில்லியன் மதிப்புள்ள இறால்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகின்றன. அமெரிக்காவின் இறால் சந்தையில் இந்தியாவின் பங்கு ஏறத்தாழ 40 விழுக்காடு ஆகும்.

அமெரிக்க வர்த்தகத்தில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய இந்தியாவின் இறால் ஏற்றுமதியாளர்கள் சீனா, ஐரோப்பா, மத்திய கிழக்கு போன்ற பிற சந்தைகளை நாடிச் செல்ல வாய்ப்புள்ளதாகத் தொழில்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவைக் காட்டிலும் தொலைதூர அடிப்படையில் அமெரிக்காவுக்கு அருகே இருக்கும் ஈக்குவடாருக்கு திரு டிரம்ப் குறைந்த விரி விதித்திருப்பதால் அங்குள்ள இறால் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரிய பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

ஈக்குவடாரின் ஏற்றுமதியில் இறால் மற்றும் எண்ணெய் முன்னணியில் உள்ளன.

குறிப்புச் சொற்கள்