விண்வெளியில் பாயும் ரிசாட்-1பி

2 mins read
44494fe2-f3f3-421e-9702-6709596de17d
ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம். - கோப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 18) காலை பிஎஸ்எல்வி- சி 61 உந்துகளம் மூலம் ரிசார்ட் -1பி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் அருகே சுற்றுலாப் பயணிகள்மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 26 போ் கொல்லப்பட்டனா்.

இதையடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது.

பாகிஸ்தான் தரப்பும் ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது.

ஆனால், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே, ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து வரும் ஞாயிற்றுக் கிழமை (மே 18) காலை 5.59 மணியவில் இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் பல்துறை ஏவுதள வாகனமான பிஎஸ்எல்வி- சி மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.

இதற்கான இறுதிக்கட்டப் பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த உந்துகளத்தில் 1,710 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-09 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் பரந்த நிலப்பரப்பில் உயர் தெளிவுத்திறன் கொண்ட நிகழ்நேர புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பெறமுடியும்.

அத்துடன் அனைத்து வானிலை தரவுகளை விண்வெளியில் இருந்து உடனுக்குடன் அனுப்பும் திறன்களைக் கொண்டது. இதில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன.

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு

இந்திய விண்வெளி வீரர் சுபபான்ஷு சுக்லா, அனைத்துலக விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே 29ஆம் தேதி, இந்திய நேரப்படி இரவு 10:33 மணிக்கு, ‘ஆக்ஸியம் மிஷன்-4’ (ஆக்ஸ்-4) திட்டத்தின்படி, ‘ஸ்பேஸ்எக்ஸ் டிராகன்’ விண்கலம் ஏவப்பட இருந்த நிலையில், தற்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் நாசா, இந்தியாவின் இஸ்‌ரோ விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்து ‘ஆக்ஸ்-4’ என்ற விண்வெளித் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.

இத்திட்டத்தின் கீழ், அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது. இந்திய விமானப்படை விமானி சுபான்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்லவிருந்தார்.

இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்பயணம் தடைபட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் 8ஆம் தேதி அவரது பயணத்துக்கான ஏற்பாடுகள் மீண்டும் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்