இந்தியாவுக்குச் செல்லும் இளவரசர் வில்லியம், இளவரசி கேட்

இந்தியாவுக்குச் செல்லும் இளவரசர் வில்லியம், இளவரசி கேட்

படம்: ராய்ட்டர்ஸ்

15 Nov 2026 - 10:21 am

1 mins read

லண்டன்: பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேட், புற்றுநோய்க்கான சிகிச்சைக்குப் பிறகு தனது மிகப்பெரிய வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த வாரம் இந்தியாவில் நடைபெறும் வருடாந்தர ‘எர்த்ஷாட்’ (Earthshot) பரிசு விழாவில் தனது கணவர் இளவரசர் வில்லியமுடன் அவர் இணைகிறார்.

44 வயது வில்லியமும், 44 வயது கேட்டும் மூன்று நாள் பயணமாக மும்பை செல்கின்றனர். நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும் விருது விழா உட்படப் பல நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்கின்றனர்.

‘எர்த்ஷாட்’ நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் ஆலியா பட், ராமி மாலெக் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். பிரிட்டனின் பாப் இசைக் குழுவான ‘டேக் தட்’ இந்தியாவில் தனது முதல் நிகழ்ச்சியைப் படைக்கவுள்ளது.

2024ஆம் ஆண்டில் புற்றுநோய்க்கான சிகிச்சைபெற்ற பிறகு, இளவரசி கேட் மேற்கொள்ளும் மிக முக்கியமான வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். நோய் தற்போது தணிந்திருந்தாலும், அதன் தாக்கம் இன்னமும் தன் வாழ்வில் இருப்பதாக அவர் கூறுகிறார்.

பருவநிலை மாற்றத்திற்குத் தீர்வுகாண 2020ஆம் ஆண்டில் ‘எர்த்ஷாட்’ பரிசை வில்லியம் உருவாக்கினார். திட்டங்களை விரிவுபடுத்த ஐந்து வெற்றியாளர்களுக்குத் தலா 1 மில்லியன் பவுண்டு (1.7 மில்லியன் வெள்ளி) வழங்கப்படுகிறது.

கிரிக்கெட், திரையுலகம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் இளவரசர் வில்லியம், இளவரசி கேட் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்