தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

படகுகளை மீட்க ராமேஸ்வரம் மீனவர்கள் குழு இலங்கை பயணம்

1 mins read
c4d64729-c833-45f0-91c6-fe272a8a6d2e
விடுவிக்கப்பட்ட 12 படகுகள் இலங்கையின் மயி​லிட்டி துறைமுகத்​தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. - படம்: இந்திய ஊடகம்

ராமேஸ்வரம்: இந்தியா-இலங்கை எல்லையைத் தாண்டி இலங்கையின் கடற்பகுதியில் மீன்​பிடித்​த​தாகக் கூறி 2021, 2022ஆம் ஆண்​டு​களில் இலங்கை கடற்​படை​யின​ரால் பறிமுதல் செய்யப்பட்ட படகு​களை விடுவிக்​கக் கோரி, அதன் உரிமை​யாளர்​கள் தரப்​பில் இலங்கை நீதி​மன்​றங்​களில் வழக்​கு தொடரப்​பட்​டது.

இதையடுத்து, இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 12 படகு​களை விடு​விக்க இலங்கை நீதி​மன்றம் உத்​தர​விட்​டது.

இதையடுத்​து, இலங்கையின் மயி​லிட்டி துறை​முகத்​தில் நிறுத்திவைக்​கப்​பட்​டுள்ள 12 படகு​களின் தற்​போதைய நிலை​யைப் பார்​வையிட்​டு, அவற்றை மீட்​டுக் கொண்டு வரு​வதற்​காக ராமேஸ்வரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து மீனவர்​கள் குழு​வினர் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) விசைப்​படகில் புறப்​பட்​டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல பறிமுதல் செய்யப்பட்ட மற்ற படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவை மீட்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்