தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இமயமலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

1 mins read
c2c89bfd-3326-4bc9-a89a-3e5ea4a7c87d
இமயமலையின் இந்தியப் பகுதியில் மொத்தம் 681 பனிப்பாறை ஏரிகள் உள்ளன. அவற்றுள் ஏறக்குறைய 430 ஏரிகள் வேகமாக விரிவடைந்து வருகின்றன.  - கோப்புப்படம்: ஊடகம்

ஸ்ரீநகர்: இமயமலையில் பனிப்பாறைகள் நிறைந்த ஏரிகள் வேகமாக விரிவடைந்து வருவதால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என இந்தியாவின் நீர் ஆணையம் எச்சரித்துள்ளது.

இமயமலையின் இந்தியப் பகுதியில் மொத்தம் 681 பனிப்பாறை ஏரிகள் உள்ளன.

அவற்றுள் ஏறக்குறைய 430 ஏரிகள் வேகமாக விரிவடைந்து வருகின்றன.

குறிப்பாக, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தப் பனிப்பாறை ஏரிகள் உள்ளன.

இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், பனிப்பாறைகள் விரிவடைவதன் காரணமாக, இந்த மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றங்கள் குறித்து உலகம் முழுவதும் ஆய்வாளர்கள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரும்பாலானோர் இமய மலையில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகுவது கவலை அளிப்பதாகக் கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்திய நீர் ஆணையமும் தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது.

தற்போது வடஇந்திய மாநிலங்கள் பலவும் தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மூழ்கித் தத்தளிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்