மூத்த தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்

1 mins read
c8852215-3791-40d5-a542-16faa92de3c1
பேராசிரியர் தெ. ஞானசுந்தரம். - படம்: தினமணி

சென்னை: மூத்த தமிழறிஞரும் பேராசிரியரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் (84) உடல்நலக் குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) காலமானார். அவரது மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“ஜனவரி 2024-ல் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலுக்குச் சென்றபோது அவருடன் உரையாடியதை நான் நினைத்துப்பார்க்கிறேன். கம்பராமாயணம் குறித்த அவரது புரிதல் மிகச் சிறப்பாக இருந்தது,” என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கல்லூரிப் பேராசிரியர், இலக்கிய ஆய்வாளர், சொற்பொழிவாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவரான தெ.ஞானசுந்தரத்துக்கு அண்மையில் தமிழக அரசு இலக்கிய மாமணி விருது வழங்கிச் சிறப்பித்தது.

வைணவ இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையாளர். ‘குறுந்தொகைத் தெளிவு’, ‘கற்பக மலர்’ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

வால்மீகி இராமாயணத்தையும், கம்பராமாயணத்தையும் ஒப்பிட்டு எழுதியது, வைணவ உரை வளம், திவ்யப் பிரபந்த உரை போன்ற இவரது ஆய்வு நூல்கள் தனிக் கவனத்தைப் பெற்றவை. பேராசிரியர் மு. வரதராசனாரின் மாணவரான இவர், பாரதிதாசனையும் சந்தித்துப் பழகியவர்.

குறிப்புச் சொற்கள்