இந்திய விசா விண்ணப்பம் பெறுவது குறித்த தூதரகத்தின் தகவல்

இந்திய விசா விண்ணப்பம் பெறுவது குறித்த தூதரகத்தின் தகவல்

1 mins read
073138c0-fd92-4546-92d4-1f38fc546a66
சென்னை விமான நிலையம். படம்: இணையம் -

அத்தியாவசிய காரணங்களுக்காக இந்தியாவுக்குச் செல்ல விரும்பும் சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் 'ஓசிஐ' அட்டை வைத்திருப்பவர்களும் சிங்கப்பூருக்கான இந்திய தூதரகத்திற்கு நேரில் சென்று விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய சுகாதார, குடும்பநல அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்குரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

விசா விண்ணப்பம் குறித்த மேல் விவரங்களுக்கு visa.singapore@mea.gov.in அல்லது cons.singapore@mea.gov.in எனும் மின்னஞ்சல் முகவரியில் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம்.

விசா விண்ணப்பம் 'பிஎல்எஸ்' நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது என சிங்கப்பூரிலிருக்கும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

#இந்தியா #சிங்கப்பூர் #விசா #Indian visa

குறிப்புச் சொற்கள்