2024 தேர்தல் வரை போராட்டம்: விவசாயிகள் எச்சரிக்கை

2024 தேர்தல் வரை போராட்டம்: விவசாயிகள் எச்சரிக்கை

1 mins read
0ce07fe5-f577-40b0-9aaa-9833d8760b8f
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியாக டிராக்டர் பேரணி நடத்த தங்களுக்கு உரிமை உள்ளது என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. படம்: இபிஏ -

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியாக டிராக்டர் பேரணி நடத்த தங்களுக்கு உரிமை உள்ளது என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

புதுச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு தேர்தல் வரை தங்களுடைய போராட்டம் நீடிக்கும் எனவும் அச்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து டெல்லி காவல்துறை முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"இந்தப் போராட்டம் பணக்கார விவசாயிகளால் தூண்டப்படுகிறது என்று பொய்யான தகவல்பரப்பப்படுகிறது. கிராமங்களில் இருக்கும் விவசாயிகளும் கூட வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாமல் நாங்கள் ஊர் திரும்பக் கூடாது என்றே எதிர்பார்க்கின்றனர். எனவே இந்தப் போராட்டம் நீண்ட நாட்கள் நீடிக்கும்," என்றார் ராகேஷ்.

குறிப்புச் சொற்கள்