இந்தியாவின் ஆக நீண்ட கம்பி வட கார் சேவை

1 mins read
bc264b4b-01d4-42bb-8ead-c8a5f8fa999a
படம்: - இந்திய ஊடகம்

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தில், டேராடூனுக்கும் முசோரிக்கும் இடையே கம்பி வட கார் சேவை அறிமுகமாகவிருக்கிறது.

டேராடூனிலிருந்து முசோரிக்குச் செல்வதற்குத் தற்போது மலைவழிச் சாலையில் 33 கி.மீ. பயணம் செய்யவேண்டும். இதற்கான பயண நேரம், வாகனப் போக்குவரத்து அடிப்படையில் ஒன்றரை மணி முதல் மூன்று மணி நேரம் பிடிக்கக்கூடும்.

எனவே, ஐந்தரை கிலோமீட்டர் தொலைவிற்கு,‘ரோப் கார்’ எனப்படும் கம்பி வட வழித்தடம் மூலம் இவ்விரு நகரங்களையும் இணைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

‘முசோரி ஸ்கை கார் கம்பெனி’ என்ற கூட்டமைப்பு இதற்குப் பொறுப்பேற்றுள்ளது.

கம்பி வட வாகனச் சேவை தொடங்கியதும் டேராடூன்–முசோரி இடையிலான பயண நேரம் 15 நிமிடங்களாக இருக்குமெனக் கூறப்படுகிறது. இந்தச் சேவை அடுத்த மூன்று ஆண்டுகளில் நடப்புக்கு வரும் என்று அந்தக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்