தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சக்கர நாற்காலி வழங்கப்படாததால் பயணி மரணம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

1 mins read
e5a20590-849f-4b4b-90e0-35238eaa1a6b
மற்றொரு சக்கர நாற்காலிக்குக் காத்திருப்பதற்குப் பதிலாக சக்கர நாற்காலியில் இருந்த தம் மனைவியுடன் சேர்ந்து அந்தப் பயணி நடந்து செல்ல விருப்பப்பட்டதாக ஏர் இந்தியா கூறியது. - படம்: இந்திய ஊடகம்

மும்பை: ஏர் இந்தியா நிறுவனத்திடம் சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையாக இருந்ததால், விமானத்திலிருந்து இறங்கி மும்பை விமான நிலைய முனையத்திற்கு நடந்து சென்ற 80 வயது பயணி ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

இச்சம்பவத்திற்காக இந்தியாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

மற்றொரு சக்கர நாற்காலிக்குக் காத்திருப்பதற்குப் பதிலாக சக்கர நாற்காலியில் இருந்த தம் மனைவியுடன் சேர்ந்து அந்தப் பயணி நடந்து செல்ல விருப்பப்பட்டதாக ஏர் இந்தியா கூறியது.

விமானத்தில் ஏறுவதற்கோ இறங்குவதற்கோ உதவி தேவைப்படும் பயணிகளுக்காக போதிய எண்ணிக்கையில் சக்கர நாற்காலிகள் இருப்பதை உறுதிசெய்ய அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 12ஆம் தேதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 80 அமெரிக்கர், ஏர் இந்தியா விமானத்தில் நியூயார்க்கில் இருந்து மும்பைக்குச் சென்றார்.

அவரும் மனைவியும் சக்கர நாற்காலிக்கு முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், சக்கர நாற்காலி பற்றாக்குறை காரணமாக அவர்களுக்கு ஒரு சக்கர நற்காலி மட்டுமே கொண்டு வரப்பட்டது. மற்றொரு சக்கர நாற்காலிக்காக காத்திருக்குமாறு அந்தப் பயணியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால், விமான நிலைய முனையத்துக்கு நடந்தே செல்ல அவர் முடிவெடுத்தார். அங்குள்ள குடிநுழைவு முகப்பில் மயங்கி விழுந்து அவர் உயிரிழந்தார்.

குறிப்புச் சொற்கள்