தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாநில கட்சிகளின் வருவாய்: பிஆா்எஸ் முதலிடம்; திமுக மூன்றாமிடம்

2 mins read
c41359f4-cf79-4787-8fbc-cd9a4e30c6b5
தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி அதிக வருவாயை ஈட்டியிருக்கிறது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் மாநில கட்சிகளின் வருவாய் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த திமுக 3வது இடத்திற்கு வந்துள்ளது.

கடந்த 2022-23ஆம் நிதியாண்டில் அதிக வருவாய் கொண்ட மாநில கட்சிகளில் பாரத ராஷ்டிர சமிதி ரூ.737.67 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் இரண்டாம் இடத்திலும் (ரூ.333.45 கோடி), தமிழகத்தை ஆளும் திமுக மூன்றாமிடத்திலும் (ரூ.214.35 கோடி) உள்ளன.

ரூ.181 கோடி வருவாயுடன் (10.40%) பிஜு ஜனதா தளம் (பிஜேடி) நான்காமிடத்திலும் ரூ.74.78 கோடி வருவாயுடன் (4.30%) ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஐந்தாமிடத்திலும் உள்ளன.

இந்த ஐந்து கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.1,541.32 கோடி (88.56%). இதில் ரூ.1,285 கோடி தோ்தல் நிதி பத்திரங்கள் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளன.

நாட்டில் மொத்தமுள்ள 57 மாநில கட்சிகளில் 39 கட்சிகளின் நிதி நிலைமையை (2022-23) பகுப்பாய்வு செய்து, ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

2022-23ஆம் நிதியாண்டில் 39 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.1,740 கோடி.

2022-23ஆம் நிதியாண்டில் மாநில கட்சிகள் செலவிட்ட மொத்த தொகை ரூ.481 கோடியாகும். இதில் ரூ.181.18 கோடி செலவு செய்து (37.66%) திரிணாமூல் காங்கிரஸ் முதலிடத்தில் உள்ளது. ரூ.79.32 கோடி செலவுடன் (16.49%) ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், ரூ.57.47 கோடி செலவுடன் (11.94%) பிஆா்எஸ், ரூ.52.62 கோடி செலவுடன் (10.94%) திமுக, ரூ.31.41 கோடி செலவுடன் (6.53%) சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

2023 அக்டோபா் 31ஆம் தேதியுடன் தங்களது வருடாந்திர தணிக்கை கணக்குகளைச் சமா்ப்பிக்க வேண்டுமென்ற தோ்தல் ஆணையத்தின் கெடுவை 16 கட்சிகள் மட்டுமே பின்பற்றியுள்ளன. மற்ற கட்சிகள் 3 முதல் 150 நாள்கள் வரை தாமதமாக இக்கணக்குகளைச் சமா்ப்பித்துள்ளன.

கட்சிகளின் வருவாய்க்கு தன்னாா்வ நன்கொடைகளே முக்கிய ஆதாரமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மாநில கட்சிகளில் அதிக வருவாய் ஈட்டிய பட்டியலில் திமுக 3வது இடத்தில் உள்ளது என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில் உள்ள மாநில கட்சிகளில் அதிக வருவாய் ஈட்டிய பட்டியலில் திமுக 3வது இடத்தில் உள்ளது என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்
குறிப்புச் சொற்கள்