ஏழு மாநில வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஏழு மாநில வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

கோப்புப் படம்: தினமணி

07 Nov 2026 - 6:59 pm

1 mins read

புதுடெல்லி: ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், நாகாலாந்து ஆகிய ஏழு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நிறைவடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அம்மாநிலங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

திருத்தப் பணியின் முடிவில், தகுதியின்மை, முகவரி மாற்றங்கள் காரணமாகப் பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 2.06 கோடி பெயர்களும் தெலுங்கானாவில் 73.39 லட்சம் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. மேலும், டெல்லியில் 47.56 லட்சம், ஆந்திராவில் 44.89 லட்சம், ஹரியானாவில் 33.83 லட்சம், நாகாலாந்தில் 1.57 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

“ஜனநாயக நடைமுறையில் தகுதியுடைய எந்தவொரு வாக்காளரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதே எங்களின் முதன்மை நோக்கம்,” எனத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, விடுபட்ட குடிமக்கள் உடனடியாக இணையதளம் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலகங்களை அணுகியோ முகவரி மாற்றம், புதிய பெயர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்