ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் தொடர்பான இறக்குமதியைக் குறைக்க இந்திய அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று வெளியான அறிக்கையொன்றில் இவ்விவகாரம் குறித்து பதிலளித்த மூத்த அதிகாரி, “கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தவோ அல்லது தற்போதைய நிலையிலிருந்து குறைக்கவோ நிறுவனங்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கபடவில்லை” என்று அதிகாரி கூறினார்.
உக்ரேன் ரஷ்யா போர் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்தன்.
எனவே இதை எதிர்கொள்ளச் சலுகை விலையில் ரஷ்யா கச்சா எண்ணெயை விற்பனை செய்துவர, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தன.
இந்த நடவடிக்கையை எதிர்த்த அமெரிக்கா, இம்மாதம் (ஆகஸ்ட் ) 1ம் தேதி முதல் இந்திய பொருள்களுக்கு 25 விழுக்காடு வரி எனும் அறிவிப்பை வெளியிட்டது.
மேலும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதால், அபராதம் விதிப்பதாகவும் அவர் சொன்னார்.
இந்திய - ரஷ்யா பொருளியல் உறவு குறித்தும் சாடியிருந்தார் டிரம்ப்.
அதன்தொடர்பில், டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தி இருப்பது சிறந்த நடவடிக்கை என்றும் கூறியிருந்தார்.
அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் வந்துதுள்ளது மூத்த அதிகாரியின் பதில்.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல வாரயிறுதி நாள்களில் வெளியான அதிகாரப்பூர்வ புதிய அறிக்கைகள், ரஷ்ய-இந்தியா வர்த்தக உறவு சார்ந்த கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துவிக்கப்பட்டுள்ளது.