பருவநிலை மாற்றத்திற்கு எதிராக அவசர நடவடிக்கை தேவை: இளவரசர் வில்லியம்

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக அவசர நடவடிக்கை தேவை: இளவரசர் வில்லியம்

1 of 2
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: இபிஏ

18 Nov 2026 - 12:51 pm

2 mins read

மும்பை: இந்தியாவிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டி‌ஷ் இளவரசர் வில்லியம், பருவநிலை மாற்றத்திற்கு எதிராக அவசர நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளார்.

“பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை இப்போது தெளிவாகக் காண முடிகிறது. நேர்மறையான நடவடிக்கைகள் மூலம் அதனை மாற்றியமைக்கலாம்,” என்று திரு வில்லியம் நம்பிக்கை தெரிவித்தார்.

நவம்பர் 17ஆம் தேதி மும்பையில் எர்த்ஷாட் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பேசிய இளவரசர் வில்லியம், வெப்ப அலைகளும் பேரழிவு தரும் வெள்ளமும் பூமிக்கு நெருக்கடியான தருணத்தை ஏற்படுத்தியுள்ளன என்றார்.

பருவநிலை மாற்றத்திற்கு நடைமுறைத் தீர்வுகளைக் காணும் நோக்கில் திரு வில்லியம் ஆறு ஆண்டுகளுக்கு எர்த்ஷாட் விருதை தொடங்கி வைத்தார் ஐந்து வெற்றியாளர்களுக்கு தலா 1 மில்லியன் பவுண்ட் (S$1.7 மில்லியன்) பரிசு வழங்கப்படுகிறது.

மும்பையைச் சேர்ந்த மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான மகிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி, தமது நிலப்பரப்பில் 60 விழுக்காட்டைக் காடுகளாகப் பராமரிக்கும் பூட்டான் ஆகியவை வெற்றியாளர்களில் அடங்கும்.

விழாவைத் திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார். சச்சின் டெண்டுல்கர், ஆலியா பட், ராமி மாலிக், டேக் தட் இசைக்குழுவினர் கலந்துகொண்டனர்.

புற்றுநோய் சிகிச்சை பெற்ற பிறகு இளவரசி கேட் பங்கேற்கும் மிக முக்கிய வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். அவரும் ஒரு விருதை வழங்கினார்.

முன்னதாக, மும்பையில் மகிந்திரா மின்சார ஆட்டோவில் இளவரசி கேட்டை இளவரசர் வில்லியம் அழைத்துச் சென்றார்.

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இளவரசர் சந்திக்கவுள்ளார். இளவரசரின் மூன்று நாள் பயணம் நவம்பர் 18ஆம் தேதியுடன் முடிகிறது.

குறிப்புச் சொற்கள்