வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘விக்ரம்-1’ விண்கலம்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘விக்ரம்-1’ விண்கலம்

2 mins read
783d7102-154c-4f2d-833e-dc91f123f0da
‘விக்​ரம்​-1’ விண்கலத்தின் பயணத்திற்கு ‘மிஷன் ஆகமன்’ என்று பெயரிடப்​பட்​டுள்​ளது. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: இந்​திய விண்​வெளி வரலாற்​றில் புதிய மைல்கல்​லாக, உள்​நாட்டுத் தனி​யார் நிறு​வனத்தால் முழுமை​யாக வடிவ​மைக்​கப்​பட்ட, முதலாவது ‘சுற்றுப்பாதை’ வகை விண்கலமான ‘விக்​ரம்​-1’ சனிக்கிழமை (ஜூலை 18) வெற்றிகரமாக விண்​ணில் ஏவப்​பட்டது.

ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள சதீஷ் தவான் விண்​வெளி நிலையத்தின் முதலா​வது ஏவுதளத்​தில் இருந்து அந்த வரலாற்றுச் சிறப்​புமிக்க முயற்சி வெற்றிகரமாக மேற்​கொள்​ளப்​பட்டது.

விண்கலம் ஏவப்படுவதை மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேரில் பார்வையிட்டார். விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து, இந்தத் திட்டத்தில் தொடர்புடைய அறிவியலாளர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ‘ஸ்​கைரூட் ஏரோஸ்​பேஸ்’ தயாரித்​துள்ள அந்த விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“இந்திய விண்வெளிப் பயணத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. விரைவான, தேவைக்கேற்ப ஏவும் சேவைகளை வழங்கும் வகையில் இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்திய இளையர்களின் திறமை, உறுதி, தொழில்முனைவு மனப்பான்மை ஆகியவற்றை இது எடுத்துக்காட்டுகிறது,” என்று அவர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

‘விக்​ரம்​-1’ விண்கலத்தின் பயணத்​துக்கு ‘மிஷன் ஆகமன்’ என்று பெயரிடப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யாவைச் சேர்ந்த தனி​யார் நிறு​வனம், தான் சொந்தமாக உரு​வாக்​கிய விண்கலத்தின்மூலம் செயற்​கைக்​கோளை விண்​வெளிச் சுற்​றுப்​பாதை​யில் நிலைநிறுத்த முயற்​சி செய்வது இதுவே முதன்முறை​யாகும்.

இந்த பயணத்​தின் நோக்​கம் ஒரு செயற்​கைக்​கோளை விண்​ணில் செலுத்​து​வது மட்டுமன்று. மாறாக, விண்கலத்தின் அனைத்து நிலைகளும் விண்​வெளிப் பயணத்தின்போது எவ்​வாறு செயல்​படு​கின்றன என்​பதை நேரடி​யாக மதிப்​பீடு செய்​து, தரவு​களைச் சேகரிப்​பதே இந்த சோதனை​யின் முதன்மைக் குறிக்கோள்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

350 கிலோவரை எடை கொண்ட சிறிய, நடுத்தர அளவி​லான செயற்​கைக்​கோள்​களை 450 கிலோமீட்டர் தொலைவில் பூமி​யின் தாழ்​வான சுற்​றுப்​பாதை​யில் நிலைநிறுத்​தும் வகை​யில்​ இந்​த விண்கலம் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

குறிப்புச் சொற்கள்