புதுடெல்லி: இந்தியக் குடிமக்கள் டிசம்பர் 22 முதல் இ-விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
விசா விண்ணப்பத்தை இணையத்தளம் வழியே பதிவேற்றலாம் என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் ஜூ ஃபெய்ஹாங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விசா தொடர்பான மேலதிக விவரங்களுக்கு புதுடெல்லியில் உள்ள சீன விசா விண்ணப்பச் சேவை மையத்தைத் தொடர்புகொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய-சீனா இடையேயான உறவுகளைப் பலப்படுத்த இருதரப்பும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இரு நாடுகளுக்கு இடையே தூதரகச் செயல்பாடுகள் மேலும் விரிவடைந்து வரும் நிலையில், நேரடி விமானச் சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

