பாகிஸ்தானுக்குத் தண்ணீர் நிறுத்தப்படும்: ஜம்மு-காஷ்மீர் அமைச்சர்

பாகிஸ்தானுக்குத் தண்ணீர் நிறுத்தப்படும்: ஜம்மு-காஷ்மீர் அமைச்சர்

1 mins read
2e38d7df-a02d-4741-aa43-201fa767b52e
ஷாபூர் காண்டி தடுப்​பணை திட்​டம் அடுத்த மாதம் 31ஆம் தேதிக்​குள் நிறைவடை​யும். - படம்: இந்து தமிழ் திசை

ஜம்மு: இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காண்டி பகு​தி​யில் கட்​டப்​பட்டு வரும் ஷாபூர் காண்டி அணை அடுத்த மாத இறு​தி​யில் நிறைவடை​யும் என்று அந்த மாநில நீர்​வளத்​துறை அமைச்​சர் ஜாவேத் அகமது ராணா தெரி​வித்​துள்ளார்.

“அணை கட்டிமுடித்த பிறகு பாகிஸ்​தானுக்குச் செல்​லும் தண்​ணீர் நிறுத்​தப்​படும்,’’ என அவர் கூறியுள்ளார்.

“மத்​திய அரசின் ரூ.485.38 கோடி மதிப்​பீட்​டில் தொடங்​கப்​பட்ட ஷாபூர் காண்டி தடுப்​பணை திட்​டம் அடுத்த மாதம் 31ஆம் தேதிக்​குள் நிறைவடை​யும். இதன்மூலம் ராவி ஆற்​றில் இருந்து பாகிஸ்​தானுக்கு வீணாகச் செல்​லும் நீர் தடுத்து நிறுத்​தப்​படும்,” என்றார் ஜாவேத்.

இந்தத் தடுப்​பணை திட்​டம்மூலம் ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மற்​றும் சம்பா மாவட்டங்களில் 32,173 ஹெக்​டர் நிலங்​களுக்​கும், பஞ்​சாப்​ மாநிலத்தில் 5,000 ஹெக்​டர் நிலங்​களுக்​கும் நீர்ப்​பாசன வசதி கிடைக்​கும்​ என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்​த ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் பஹல்​காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடி தரும் வகையில், பாகிஸ்​தானுடன் செய்துகொண்ட சிந்து நதிநீர் ஒப்​பந்​தம் நிறுத்​தப்​படும் என இந்தியா அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்