ஜம்மு: இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காண்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் ஷாபூர் காண்டி அணை அடுத்த மாத இறுதியில் நிறைவடையும் என்று அந்த மாநில நீர்வளத்துறை அமைச்சர் ஜாவேத் அகமது ராணா தெரிவித்துள்ளார்.
“அணை கட்டிமுடித்த பிறகு பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்படும்,’’ என அவர் கூறியுள்ளார்.
“மத்திய அரசின் ரூ.485.38 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட ஷாபூர் காண்டி தடுப்பணை திட்டம் அடுத்த மாதம் 31ஆம் தேதிக்குள் நிறைவடையும். இதன்மூலம் ராவி ஆற்றில் இருந்து பாகிஸ்தானுக்கு வீணாகச் செல்லும் நீர் தடுத்து நிறுத்தப்படும்,” என்றார் ஜாவேத்.
இந்தத் தடுப்பணை திட்டம்மூலம் ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மற்றும் சம்பா மாவட்டங்களில் 32,173 ஹெக்டர் நிலங்களுக்கும், பஞ்சாப் மாநிலத்தில் 5,000 ஹெக்டர் நிலங்களுக்கும் நீர்ப்பாசன வசதி கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுடன் செய்துகொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தப்படும் என இந்தியா அறிவித்தது.

