மாதவி இலக்கிய மன்றத்தின் 45வது தமிழர் திருநாள் விழா

1 mins read
ea47d959-95dd-447e-ab59-b4dafad309c4
மே 10ஆம் தேதி மாலை, உமறுப் புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் நடைபெறும். - படம்: மாதவி இலக்கிய மன்றம்

சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றத்தின் 45வது தமிழர் திருநாள் விழா சனிக்கிழமை (மே 10) நடைபெறவிருக்கிறது. சனிக்கிழமை (மே 10) மாலை 5.30 மணியளவில் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நிகழ்ச்சி தொடங்கும்.

மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி பரிசளிப்பு, கோ சாரங்கபாணி விருது, மாதவி கண்ட மாதரசி விருது ஆகியவை நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

உள்ளூர்ப் பேச்சாளர்களின் சொல்லரங்கம், சிறப்பு விருந்தினரின் சிறப்புரை, மாணவர்களின் இலக்கிய, கலைப் படைப்புகள், சிந்தனையைத் தூண்டும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அனுமதி இலவசம். மேல்விவரங்களுக்கு 9116 6043 என்ற தொலைபேசி எண்ணில் திரு என்.ஆர்.கோவிந்தனைத் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்