தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் இவ்வாண்டு சிங்கப்பூரின் சமய நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் இந்திய, மலாய், சீன அன்னைகளுக்கு ‘அன்னையர் திலகம்’ விருது வழங்கி மரியாதை செய்கிறது.
இந்த ஆண்டு அன்னையர் தினம், மே 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று காலை 9 மணியளவில் விக்டோரியா ஸ்திரீட்டில் அமைந்துள்ள தேசிய நூலகக் கட்டடத்தின் ‘த பாட்’ அரங்கில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் அன்னையர் தின நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் இணைப் பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
மாணவர் ஜெயப்பிரகாஷ் ஜோசித்தின் பாட்டு, மாணவி க்ஷீரஜாவின் நடனம், ஸ்ரீநிதி ரெங்கப்பிரசாத்தின் ‘அன்னையின் பெருமை’ எனும் தலைப்பிலான பேச்சு ஆகியவற்றுடன் இசையமைப்பாளர் பரசு கல்யாணின் இசை நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது.
நிகழ்ச்சியின் முடிவில் மூன்று பெண்களுக்கு அன்னையர் திலகம் விருது வழங்கப்படும். சிங்கப்பூர் இளையர் மன்றத் தலைவர் லாவண்யா பிரேமானந்த் நிகழ்ச்சியை நெறிப்படுத்துகிறார்.
பிற்பகல் உணவு வழங்கப்படும். வருகையாளர்கள் சொந்தத் நீர்ப்புட்டியைக் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

