கொண்டைக்கடலை உண்பதால் ஏற்படும் நன்மைகள்

கொண்டைக்கடலை உண்பதால் ஏற்படும் நன்மைகள்

1 mins read
51feaca4-06e1-4963-afea-7f9d8e753c84
கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. - படம்: பிக்சாபே

பருப்பு வகைகளில் மிகப் பிரபலமான கொண்டைக்கடலை, இந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ருசியைத் தவிர அதை உட்கொள்வதால் ஏராளமான பலன்களும் உள்ளன. 

புரதச் சத்து நிறைந்தது

தசைகள், திசுக்கள், கிருமி எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றுக்கு புரதம் மிகப்பெரிய பங்காற்றுகிறது. 

ஒரு கப் கொண்டைக்கடலையில் சுமார் 14.5 கிராம் புரதம் உள்ளது. இது சராசரியாக 84 கிலோ எடையுள்ள ஒருவருக்குத் தினசரி பரிந்துரைக்கப்படும் சத்துகளில் 20 விழுக்காடாகும்.

மேலும், உண்ணும் உணவில் தாவர அடிப்படையிலான புரதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதிக தாவர அடிப்படையிலான உணவுகள் உண்பதால் இதய நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டது. 

கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருத்தல்

கொண்டைக்கடலையில் நார்ச்சத்து உள்ளது. தமனிகளில் உருவாகும் கொழுப்பைக் குறைக்க இந்த நார்ச்சத்து உதவுகிறது. 

ஒரு கப் கொண்டைக்கடலையில் சுமார் 12.5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவுகளில் பாதி. 

முக்கிய வைட்டமின்கள், தாதுக்கள் 

கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் சுவாச வாயுவின் ஓட்டத்துக்கு உதவுகிறது.

இறைச்சியில் இருக்கும் இரும்புச்சத்தைவிட தாவர அடிப்படையிலான உணவில் இருக்கும்  இரும்புச்சத்து எளிதாக உடலில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 

கொண்டைக்கடலையில் ‘ஃபோலேட்’ அதிகமாக உள்ளது. இது உயிரணு உற்பத்திக்கு முக்கியமான ‘பி’ வைட்டமின் ஆகும்.

இருப்பினும், கொண்டைக்கடலை மற்றும் பல தாவர அடிப்படையிலான உணவில் புரதச்சத்து அதிகம் இல்லாததால் தேவையான அமினோ அமிலங்களை வழங்கும் முழு தானிய உணவுகளுடன் கொண்டைக்கடலையைச் சேர்த்து உண்பது பரிந்துரைக்கப்படுகிறது. 

குறிப்புச் சொற்கள்