தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் அனைத்துலக நகைக் கண்காட்சியில் ‘பீமா ஜுவல்லர்ஸ்’

2 mins read
ab02e265-b970-45c8-ad5c-913eec346baf
வாடிக்கையாளர்கள் பீமா ஜுவல்லர்சின் புதிய ஆபரண வகைகளை எஸ்11, 17 கடைகளில் காணலாம். - படம்: பீமா ஜுவல்லர்ஸ்

இந்தியாவின் நகை விற்பனை நிறுவனமான ‘பீமா ஜுவல்லர்ஸ்’ இந்த ஆண்டின் சிங்கப்பூர் அனைத்துலக நகைகள் கண்காட்சியில் (எஸ்ஐஜெஇ) தனது தங்க, வைர நகை வகைகளை வாடிக்கையாளர்களுக்குக்‌ காட்சிப்படுத்துகிறது.

மூன்றாம் முறையாக இந்தக் கண்காட்சியில் பங்கேற்கும் பீமா ஜுவல்லர்ஸ், 72 சதுர மீட்டர் அளவில் ஆகப் பெரிய கடையைக் கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் பீமா ஜுவல்லர்சின் புதிய ஆபரண வகைகளை எஸ்11, 17 (Booths S11, S17) கடைகளில் காணலாம்.

காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பீமா ஜுவல்லர்சின் புதிய ஆபரண வகைகள்.
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பீமா ஜுவல்லர்சின் புதிய ஆபரண வகைகள். - படம்: பீமா ஜுவல்லர்ஸ்

இந்த ஆண்டு, 22 கேரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட நகைகளை ‘பீமா’ அறிமுகப்படுத்துகிறது. வைரம், மரகதம், மாணிக்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்ட இந்தச் சேகரிப்பில், பிரம்மாண்டமான கழுத்தணிகள், காதணிகள், வளையல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நகைகள் பாரம்பரியக் கோயில் பாணியை நவீன வடிவமைப்புடன் இணைக்கின்றன.

மேலும், 18 கேரட் ரோஸ் தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய தொகுப்பையும் ‘பீமா’ காட்சிப்படுத்துகிறது. இவை மென்மையான இளஞ்சிவப்பு வண்ணம், எளிய வடிவமைப்பு, மலர் வடிவங்கள், நுணுக்கமான ரத்தினங்கள் முதலியவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அன்றாடப் பயன்பாட்டிற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற பல வகை வடிவமைப்புகள் இதில் அடங்கும்.

காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பீமா ஜுவல்லர்சின் புதிய ஆபரண வகைகள்.
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பீமா ஜுவல்லர்சின் புதிய ஆபரண வகைகள். - படம்: பீமா ஜுவல்லர்ஸ்

பீமா முகப்புக்கு வரும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

தங்க நகைகளுக்கு செய்கூலி 50 விழுக்காடாகவும் வைர நகைகளுக்கு பூஜ்ஜியம் விழுக்காடாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இயற்கை வைரங்கள் சந்தை விலையைவிட ஒரு கேரட்டுக்கு ஏறத்தாழ S$1,000 குறைவாக விற்பனை செய்யப்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல், சிறப்புச் சலுகையாக ஆபரணத் தங்க விலை கிராமுக்கு S$120 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சிங்கப்பூர்ச் சந்தை விலையான S$134ஐ விடக் குறைவாகும்.

சிங்கப்பூரில் நீண்ட காலமாக இயங்கிவரும் சிங்கப்பூர் அனைத்துலக நகைகள் கண்காட்சியின் இந்த ஆண்டு நிகழ்ச்சியை வியாழக்கிழமை (ஜூலை 10) மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

20ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாடும் எஸ்ஐஜெஇ, 26 நாடுகளைச் சேர்ந்த 414 தயாரிப்புகளின் US$250 மில்லியனுக்கும் அதிக மதிப்பிலான நகைகளைக் காட்சிப்படுத்துகிறது.

இந்த ஆண்டின் கண்காட்சிக்கு வரலாற்றில் ஆக அதிக எண்ணிக்கையில் 15,000 பேர் வருகையளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சிங்கப்பூரிலிருந்து 90 நகை நிறுவனங்களும் இந்தியாவிலிருந்து 10 நகை நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

மேலும், 1988க்குப் பிறகு உலக வைர மாநாடு சிங்கப்பூரில் மீண்டும் நடைபெறும் என்ற முக்கிய அறிவிப்பும் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. 2026ல் நடைபெறும் இந்த மாநாடு, எஸ்ஐஜெஇ 2026உடன் இணைந்து நடத்தப்படும்.

இந்த ஆண்டின் கண்காட்சி, ஜூலை 10 முதல் ஜூலை 12ஆம் தேதிவரை காலை 11.30 முதல் இரவு 8.30 மணிவரை நடைபெறுகிறது. இறுதி நாளான ஜூலை 13ஆம் தேதியன்று கண்காட்சி காலை 11.30 மணிக்குத் தொடங்கி, இரவு 7.30 மணிவரை நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்