கதைக்களத்தில் ‘ஒட்டுக்கடை’

கதைக்களத்தில் ‘ஒட்டுக்கடை’

படம்: இணையம்

30 May 2025 - 5:02 pm

1 mins read

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 132வது கதைக்களம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) பிற்பகல் 4 மணிக்குச் சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள ‘விபிஆர்’ அறையில் நடைபெறவிருக்கிறது.

அந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் கி சுப்பிரமணியத்தின் ‘ஒட்டுக்கடை’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய நூல் அறிமுகம் இடம்பெறவுள்ளது. நூலின் சிறப்புகள் குறித்து திருவாட்டி அனுராதா வெங்கடேஸ்வரன் வாசகர்களோடு பகிர்ந்துகொள்வார். அதனைத் தொடர்ந்து, நூலாசிரியருடனான கலந்துரையாடல் இடம்பெறும்.

கதைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படவிருக்கின்றன.

ஜூலை மாத நூல் அறிமுகப் போட்டிக்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட நூலறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த நான்கு நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.

படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு https://forms.gle/VdpmyEfdVas5wtMLA என்ற இணையவழிப் படிவத்தின் வழியாக ஜூன் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேல்விவரங்களுக்கு: https://www.singaporetamilwriters.com/16.

தொடர்புக்கு: பிரதீபா வீரபாண்டியன் - 81420220, பிரேமா மகாலிங்கம் - 91696996

குறிப்புச் சொற்கள்