சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 139வது கதைக்களம் நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 04) பிற்பகல் 4.00 மணிக்கு, தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்திலுள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் நடைபெறவிருக்கிறது.
நிகழ்ச்சியில், முன்னோடி எழுத்தாளர் புதுமைதாசன் எனும் பி.கிருஷ்ணனின் படைப்புகள் குறித்து திரு இரா புகழேந்தி, திரு சலீம் ஹாதி இருவரும் உரையாற்ற உள்ளனர்.
மேலும், கதைக்களத்திற்கு வந்திருக்கும் போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும். கழகத்தின் இளையர் பிரிவு உறுப்பினர் செல்வி எழிலி கருணாகரன் இலக்கியா நிகழ்ச்சியை நெறிப்படுத்துவார்.
பிப்ரவரி மாதப் போட்டிகள்:
நூல் அறிமுகப் போட்டிக்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் அறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த 4 நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.
சிறுகதைப் போட்டிக்கான தொடக்கவரிகள்:
உயர்நிலைப்பள்ளி மாணவர் பிரிவு: 200-300 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
‘கடந்த ஆண்டின் புத்தாண்டுத் தீர்மானம் என்னானது?’ என் மனம் கேள்வி எழுப்பியது.
இளையர் பிரிவு: 300-400 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
“நீ இன்னுமா உயிரோடு இருக்கிறாய்?” என்ற கேள்வியால் கால்கள் என்னை அறியாமலே பின்னுக்குச் சென்றன.
தொடர்புடைய செய்திகள்
பொதுப்பிரிவு: 400-500 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
‘ஏதோ ஒன்று குறைகிறது. என்னவாக இருக்கும்?’ எப்படி யோசித்தும் ஒன்றுமே பிடிபடவில்லை.
படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு https://forms.gle/VdpmyEfdVas5wtMLA என்ற மின்னியல் படிவம் வழியாக ஜனவரி 23க்குள் அனுப்பி வைக்கவும். மேல்விவரங்களுக்கு: https://www.singaporetamilwriters.com/16 என்ற இணையப்பக்கத்தையோ 8725 8701 என்ற எண்ணில் திருவாட்டி மணிமாலா மதியழகனையோ 9169 6996 என்ற எண்ணில் திருவாட்டி பிரேமா மகாலிங்கத்தையோ நாடலாம்.

