தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கருவறையில் தொடங்கும் அறிவார்ந்த பெற்றோரியல்’ நூல் அறிமுக விழா

1 mins read
a61241ba-3809-4601-aadc-144d5bcb5ac4
படம்: - ஏற்பாட்டுக்குழு

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் மலேசிய எழுத்தாளரும் உளவியலாளருமான கே.ஏ.குணா எழுதிய ‘கருவறையில் தொடங்கும் அறிவார்ந்த பெற்றோரியல்’ என்னும் நூல் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) அறிமுகம் காண்கிறது.

மாலை 6 மணிக்கு தேசிய நூலகக் கட்டடத்தின் 5வது தளத்திலுள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில், தமிழ் முரசின் ஆசிரியர் த.ராஜசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

எழுத்தாளர் கழகச் செயலாளர் பிரேமா மகாலிங்கம் வரவேற்புரை ஆற்ற, தலைவர் நா.ஆண்டியப்பன் விழாவிற்குத் தலைமையேற்கிறார்.

சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழக விரிவுரையாளர் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் நூலை அறிமுகம் செய்து உரையாற்றுவார். ஏஸ் இண்டர்நேஷனல் நிறுவன நிர்வாக இயக்குநர் முனைவர் பா.இராமநாதன், தமிழாசிரியர் மா.அர்ச்சுனன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் தலைவர் மன்னர் மன்னன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

இறுதியாக, நூலாசிரியர் கே.ஏ.குணா ஏற்புரையும் நன்றியுரையும் ஆற்றுவார்.

எழுத்தாளர் கழக இளையர்ப் பிரிவின் தலைவி கிருஷ்மிதா ஷிவ் ராம் நிகழ்ச்சி நெறியாளராகப் செயல்படுவார். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்