ஐம்பது வயதிற்குப் பிறகு ஒவ்வொரு பத்தாண்டு காலகட்டத்தில் மனித உடலிலிருந்து 5 விழுக்காடு வரை தசை வளர்ச்சியை இழப்பது இயல்பு.
இந்தத் தசையிழப்பு முப்பது வயது தொடங்கி படிப்படியாக தசை இழக்கப்படும் ஆபத்தான நிலை ‘சர்கோபீனியா’ (sarcopenia) என்பதாகும்.
மிதமிஞ்சிய தசையிழப்பால் உடல் மீண்டுவரும் தன்மை பாதிக்கப்படலாம். முறிவுகள் சரியாவதற்குக் காலம் எடுக்கலாம். அத்துடன், நடமாடும் தன்மையும் குறையலாம்.
ஒவ்வொரு 1 விழுக்காடு தசை இழக்கப்படும்போது, வலிமை மற்றும் செயல்பாட்டில் 3-5 விழுக்காடு குறைவு ஏற்படலாம்.
சர்கோபீனியா என்பது உடலின் தசை பலவீனத்தை மட்டுமே குறிப்பது அன்று. வளர்சிதை மாற்றம், இன்சுலின் உணர்திறன், உடல் எடைக் கட்டுப்பாடு ஆகியவற்றை இந்நோய் பாதிக்கின்றது.
அதோடு, நீரிழிவு நோய், இதய நோய், கல்லீரலில் கொழுப்புமிகுதி போன்ற நாட்பட்ட நோய்களின் ஆபத்துகளையும் இது அதிகரிக்கிறது.
மூப்படையும் தசைகள் புரதம் உள்வாங்குவதையும் உடற்பயிற்சி செய்யும் போதும் சரியாகச் செயல்படுவதையும் ‘அனபாலிக் எதிர்ப்பு’ தடுக்கிறது.
இதனால் எடையைப் பராமரிப்பது கடினமாகிறது. அன்றாட வாழ்க்கையில் இந்தச் சவால்களின் அறிகுறிகள் தென்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
படிக்கட்டுகளில் ஏறுவது, ஜாடிகளைத் திறப்பது, வேலை செய்வது போன்ற செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.
இந்தச் சவாலுக்கான தீர்வு, புரதம் மற்றும் எதிர்ப்பு உடற்பயிற்சியை இணைப்பதில் உள்ளது.
கொழுப்பற்ற இறைச்சி, மீன், முட்டை, பால், சோயா, பயறு போன்ற முழு உணவுகளும் சிறந்தவை. இறைச்சியிலிருந்தும் செடிகளிலிருந்தும் பெறப்படும் புரதங்கள் இரண்டிற்கும் மதிப்பு உண்டு.
விலங்கிறைச்சிப் புரதங்கள் தசையைப் பாதுகாக்க உதவுகின்றன, அதே நேரத்தில் தாவர புரதங்கள் நீண்டகால இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வழக்கமான வலிமைப் பயிற்சியுடன், போதுமான புரதத்தை உணவில் சேர்த்துக்கொள்வது சார்கோபீனியாவின் அபாயங்களுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பாகும்.