தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இயற்கை நுண்ணறிவால் விளைந்த செயற்கை நுண்ணறிவு: திருக்குறள் விழாவில் பர்வீன் சுல்தானா பேச்சு

2 mins read
db0ac485-bac1-42c7-9ffc-5679ac379aa1
திருவாட்டி சாந்தி செல்லப்பனுக்குத் திருவள்ளுவர் விருதை வழங்குகிறார் திரு விக்ரம் நாயர். உடன் (இடமிருந்து) திருவாட்டி சீதாலட்சுமி, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் ஹரிகிருஷ்ணன் முத்துசாமி, தொழிலதிபர் அப்துல் ஜலீல். - படம்: தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம்
multi-img1 of 2

இன்றைய உலகை ஆட்டிப்படைத்துவரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏஐ) மனிதனின் இயற்கை நுண்ணறிவு மூலம்தான் உருவாக்கப்பட்டது என்று தன்முனைப்பு பேச்சாளர், எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், சொற்பொழிவாளர் எனப் பன்முகம் கொண்டவரான முனைவர் பர்வீன் சுல்தானா கூறியுள்ளார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் தமது திருக்குறளில் அக்கருத்துகளைப் பொதிந்து வைத்துள்ளார் என்று தமது கருத்தை அவர் சான்றுகளோடு விளக்கினார்.

இம்மாதம் 5ஆம் தேதி சனிக்கிழமை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிங்கப்பூரின் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் நடத்திய திருக்குறள் விழா 2025ல் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியபோது திருவாட்டி பர்வீன் இவ்வாறு சொன்னார்.

இயந்திரமயமான செயற்கை நுண்ணறிவைவிட மனிதாபிமானமிக்க மானுடப் பண்புகள் மிகுந்த மனிதனின் இயற்கை நுண்ண[Ϟ]றிவே மேலானது என்பதே திருக்குறள் நமக்கு உணர்த்தும் அறம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

38வது திருக்குறள் விழாவின் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் கலந்துகொண்டார்.

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் இவ்வாண்டிற்கான திருவள்ளுவர் விருதும் ஐந்து சவரன் தங்கப்பதக்கமும் தமிழ் ஆர்வலரும் சமூக சேவகரும் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தின் இயக்குநருமான திருவாட்டி சாந்தி செல்லப்பனுக்கு வழங்கப்பட்டது.

தமது கல்விப்பணியும் சமூகப் பணியும் தமது தனிப்பட்ட முயற்சி மட்டுமல்ல என்றும் அவை அனைத்திலும் தமது குழு உறுப்பினர்களின் பங்கும் அதிக அளவில் உள்ளது என்றும் கூறிய திருவாட்டி சாந்தி, அவ்விருதினைத் தமது குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் காணிக்கையாக்குவதாகக் குறிப்பிட்டார்.

திருக்குறள் விழா 2025 போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த 109 மாணவர்களுக்கும் விழாவிற்கு நல்லாதரவு வழங்கிய புரவலர்களுக்கும் நினைவுப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மழலையர் பள்ளி முதல் தொடக்கக்கல்லூரி வரை பயிலும் மாணவர்களுக்குத் திருக்குறளை மனனம் செய்து ஒப்பித்தல், இருவர் இணைந்து குறள் பற்றிப் பேசுதல், சொந்தமாகக் குறள் இயற்றுதல் முதலிய பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அவற்றில் 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்