இலக்கிய அமைப்பான ‘மற்றும் குழுவினரின்’ இரண்டாவது மாதாந்தரக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) மாலை 4 மணிக்குச் சிங்கப்பூர் தேசிய நூலகக் கட்டடத்தின் ‘புரோகிராம் ரூம் 3’ல் நடைபெற உள்ளது.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் இந்த அமைப்பின் முதல் கூட்டம் ஜூன் 29ஆம் தேதி மாலை 4 மணிக்குச் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.
குறும்பட இயக்குநர் மாதவன் ராமசாமியின் ‘சேலரி டே’ குறும்படம் திரையிடப்பட்டு, இயக்குநருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
எழுத்தாளர் செந்தில் ஜகன்நாதனின் மழைக்கண் சிறுகதை பற்றி வாசகர்கள் கருத்துரைத்தனர்.
பிறமொழி இலக்கியப் பிரிவில் ஜோசஃபின் சாய் எழுதிய ‘த மைலோ டின் தட் சேஞ்டு மை லைஃப்’ சிறுகதையைப் பகிர்ந்துகொண்ட வினோத், அந்தத் தொகுப்பைப் பற்றிய அறிமுகத்தையும் வழங்கினார்.
இறுதியாகக் கவிஞர் பிரமிள் எழுதிய ‘வண்ணத்துப் பூச்சியும் கடலும்’, கவிஞர் கல்பற்றா நாராயணனின் ‘தொடுதிரை’ ஆகிய கவிதைகள் வாசிக்கப்பட்டு அவற்றின் வடிவம், அழகியல், பொருள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.
இரண்டாவது கூட்டத்தில் எழுத்தாளர் பா.திருச்செந்தாழையின் ‘விலாஸம்’ சிறுகதை, “த இன்விசிபில் கான்ட்ராக்ட்’ குறும்படம், திரையிசைப் பாடல்களில் எடுத்தாளப்பட்ட இலக்கியத் தொடர்புகள், சில கவிதைகள் பற்றிய உரையாடல் அங்கங்கள் இடம்பெறும்.
மேல்விவரங்களுக்கு:
தொடர்புடைய செய்திகள்
மதிக்குமார் தாயுமானவன்: 93264096
யாழிசை மணிவண்ணன்: 83575294