மாணவர்களுக்கான சிறுகதைப் பயிலரங்கு

மாணவர்களுக்கான சிறுகதைப் பயிலரங்கு

1 mins read
354026f9-ae9e-4a3b-8c08-300442c8c6fa
மாணவர்களுக்கான சிறுகதைப் பயிலரங்கிற்குச் சொல்லாடும் முன்றில் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. - படம்: சொல்லாடும் முன்றில்
multi-img1 of 2

சிறாரிடம் தமிழார்வத்தையும் இலக்கிய ஆர்வத்தையும் தூண்டி வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் ‘சொல்லாடும் முன்றில்’ அமைப்பு மாணவர்களுக்கான இலக்கியப் பயிலரங்கை நடத்தவிருக்கிறது.

இந்நிகழ்ச்சி மார்ச் 8ஆம் தேதி காலை மணி 10 முதல் பிற்பகல் மணி 1.45 வரை விக்டோரியா ஸ்திரீட்டில் அமைந்துள்ள தேசிய நூலகக் கட்டடத்தின் ஐந்தாம் தளத்திலுள்ள பாசிபிலிட்டி அறையில் நடைபெறும்.

மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் பயிலரங்கை வழிநடத்தவிருக்கிறார்.

நவீன சிறார் இலக்கிய அறிமுகம், சிறுவர் சிறுகதையின் தன்மை, வளர்ச்சி, படைப்பு, சிறுவர் சிறுகதையில் முக்கோணப் படைப்பாற்றல் உத்திகள் உள்ளிட்ட பகுதிகள் நிகழ்ச்சியில் இடம்பெறும்.

கே. பாலமுருகனின் ‘தலேஜு’ நூல் வெளியீடும் நிகழ்ச்சியில் இடம்பெறும்.

முதலில் பதிவுசெய்யும் 30 மாணவர்கள் மட்டுமே பயிலரங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். விருப்பமுள்ளோர் https://forms.gle/YLpwuX1Dc2QMVRVf7 எனும் கூகல் படிவம் வழியாகப் பதிவுசெய்யலாம்.

மேல்விவரங்களுக்கு: நீதிப்பாண்டி - 8237 7006

குறிப்புச் சொற்கள்