நீரிழிவைச் சமாளிப்பதற்கு சமூக ஊடகங்கள் கைகொடுக்கலாம்

1 mins read
ba918f0f-c182-47f4-bde5-bc657f843efb
நீரிழிவைச் சமாளிப்பதற்கு மிக முக்கியமாக தேவைப்படும் சுய கட்டுக்கோப்பை செயலிகள் மேம்படுத்த உதவும்.  - படம்: இணையம்

நீரிழிவைச் சமாளிப்பது எளிதன்று. நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவுத் தெரிவுகளிலும் உணவின் அளவிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவேண்டும்.

இயந்திர முறையின்வழி அவர்கள் ரத்தத்தின் சக்கரை அளவைக் கவனிக்கவேண்டும். மருந்து மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்ளவேண்டும்.

பெரியவர்களில் பத்துப் பேரில் ஒருவர் நீரிழிவால் அவதிப்படுகையில் உலகில் கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் டாலர், இந்நோய்க்குச் செலவு செய்யப்படுகிறது. 

நீரிழிவு தொடர்பான மரணங்களில் 80 விழுக்காடு குறைந்த, நடுத்தர வருமான நாடுகளில் நிகழ்வதால் அந்நோயின் கடுமை, அந்நாடுகளைச் சேர்ந்தவர்களில் அதிகம் பாதிப்பதைக் காண முடிகிறது.

நீரிழிவைச் சமாளிப்பதில் சமூக ஊடகங்களும் உதவுகின்றன. அதைச் சமாளிப்பதற்கு மிக முக்கியமாக தேவைப்படும் சுய கட்டுக்கோப்பை செயலிகள் மேம்படுத்த உதவும். 

2024ல் இருபது ஆய்வறிக்கைகளை மையப்படுத்தி வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, ‘டைபெட்டிஸ் ஸ்ட்ரோங்’, டுடைபெட்டிஸ் (TuDiabetes) போன்ற தளங்களைப் பயன்படுத்துவோரில் 78 விழுக்காட்டினர் தங்களால் நீரிழிவை நன்கு சமாளிக்க முடியும் என நம்புகின்றனர்.

‘டைபெட்டிஸ்வாரியர்’ (#DiabetesWarrior) என்ற ஹேஷ்டேக் வழியாக நீழிரிவு பராமரிப்பு பற்றிய காணொளிகளை மக்கள் இணையத்தில் தேடலாம்.

நீரிழவு உடையோருக்கு உடற்பயிற்சி மிக சிறந்தது என்பதால் தாங்கள் நடனம் ஆடுவதை  டிக்டாக் தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். நடனமாடுவதில் உள்ள சவாலை ஏற்று பலர், துணிவுடன் இத்தகைய காணொளிகளைப் பதிவேற்றம் செய்கின்றனர்.

நடனத்தில் விருப்பமில்லாதோர், வேறேதேனும் உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி எந்த வடிவில் இருந்தாலும் அதனை நீங்கள் பதிவேற்றம் செய்யும்போது உங்களுக்கு ஆதரவான கருத்துகள் சில தேடி வரலாம். 

குறிப்புச் சொற்கள்