குறட்டை நோயை கண்டறிய அறிகுறிகள்

1 mins read
091b9f7b-659a-4035-98c2-9f20fdaa73f1
மாதிரிப்படம்: - பிக்சாபே

மனிதனுக்கு தூக்கம் மிக முக்கியமானது. 

சரியாக தூங்காவிட்டால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிவரும்.

தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய ஒன்று தான் குறட்டை. அது கொடுமையானது.

உலகில் கிட்டத்தட்ட 30 விழுக்காடு மக்களுக்கு குறட்டை என்பது பிரச்சினையாக உள்ளது. ஆனால், அது நோய் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

சில நேரங்களில் உடல் பருமனாக உள்ளவர்களுக்கு குறட்டை வருவதால் மூச்சு அடைத்து இடையில் விழிப்பு வரலாம். அதுதான் குறட்டை நோய்.

தூக்கத்தில் குறட்டையால் மூச்சு அடைத்து இடையில் விழிப்பு வருவது, காலையில் எழும் போது மீண்டும் தூங்க வேண்டும் என்று தோன்றுவது, உடல் சோர்வு, மனச்சோர்வு, எப்போதும் கோபப்படுதல் போன்றவை குறட்டை நோய் அறிகுறிகள் ஆகும்.

குறட்டை நோயை கண்டறியும் நவீன முறைகள் பல தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

உடல் பருமனாக இருந்தால் உடல் எடையை குறைப்பதே முக்கிய தீர்வு.

அதற்கு உணவு பழக்கத்தில் மாற்றம் மிக அவசியமானது. பச்சை காய்கறிகள் அதிகம் உண்பது, நொறுக்குத் திண்பன்டங்களைத் தவிர்ப்பது நல்லது.

உடற்பயிற்சி செய்தால் நல்ல தூக்கம் வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது எடைத்தூக்குவது தூக்கத்திற்கு உதவும் என்று தெரிவித்தனர்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழுவது, இரவு நேரங்களில் அதிகம் விழித்திருக்காமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் நல்ல தூக்கத்திற்கு உதவும்.

குறிப்புச் சொற்கள்