தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கவிமாலை கவிதைப் போட்டி

2 mins read
914dd62b-1508-4819-8fa5-1c2e9b4723ee
‘கவி­மாலை கூடல் 276’ எனும் மாதாந்­தர நிகழ்வில் மூத்த கவிஞர் க.து.மு.இக்பாலுடன் மாணவர்கள். - கோப்புப் படம்: கவிமாலை

தமிழ் மொழி விழா 2024 முன்னிட்டு கவிமாலை மாணவர்களுக்கான கவிதைப் போட்டிகளை நடத்துகிறது.

உயர்நிலை மாணவர்களுக்கு கவிதை பயிலரங்கு, கவிதை எழுதும் போட்டி, கவிதை மொழிபெயர்ப்பு போட்டி ஆகியவையும், தொடக்க நிலை மாணவர்களுக்கான கவிதை சொல்லும் போட்டி மற்றும் AI செயற்கை நுண்ணறிவைக் கொண்டு கவிதைகளைப் படைக்கும் போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

உயர்நிலை மாணவர் பிரிவில், உயர்நிலைப்பள்ளி, தொடக்கக்கல்லூரி, பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். இப்பிரிவினருக்கு கவிதை பயிலரங்குடன், கவிதை எழுதும் போட்டி, கவிதை மொழிபெயர்ப்பு போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் இரண்டிலும் பங்குபெறலாம்.

மொழிபெயர்ப்புப் போட்டிக்கு, தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்.

பயிலரங்கு வரும் சனிக்கிழமை 24/2/2024 அன்று மதியம் 2 மணிக்கு தேசிய நூலகத்தில் நடைபெறும். எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் பயிலரங்கை வழி நடத்துகிறார்.

பயிலரங்கைத் தொடர்ந்து மாணவர்கள் கவிதை எழுதி சமர்ப்பிக்க வேண்டும். பதிவு செய்ய இறுதி நாள் 21.02.2024 காண்க: https://tinyurl.com/ycefs597

தொடக்கநிலை மாணவர்களுக்கு கவிதை சொல்லும் போட்டி இரண்டு பிரிவுகளாக நடைபெறுகின்றன.

முதல் பிரிவு- தொடக்க நிலை ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டி 17.03.2024 மாலை 3 மணிக்கு தேசிய நூலகத்தில் நடைபெறவுள்ளது. 

இரண்டாவது பிரிவு - தொடக்க நிலை நான்கு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டி: 17.03.2024  மாலை 3 மணிக்கு தேசிய நூலகத்தில் நடைபெறும்.

தொடக்க நிலை ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான போட்டியில் சிங்கப்பூர்க் கவிஞர்களின் கவிதையைத் தேர்ந்தெடுத்துச் சொல்லவேண்டும். கவிதை 20 முதல் 30 வரிகளுக்குள் இருக்கவேண்டும். அதிகபட்ச நேரம் இரண்டு நிமிடங்களுக்குள் படைக்க வேண்டும். 

தொடக்க நிலைப் போட்டிகளுக்கு http://tinyurl.com/2p85jnk8 என்ற இணைப்பின் வழி 14.03.2024 தேதிக்குள் பதிவு செய்க. 

செயற்கை நுண்ணறிவு (ஏஐ)கொண்டு கவிதை படைக்கும் போட்டியில் எல்லா மாணவர்களும் பங்கேற்கலாம்.

இப்போட்டிக்கான காணொளிகளை அனுப்ப வேண்டிய இறுதி நாள் 17.3.2024. http://tinyurl.com/4afdsf52  என்ற இணைப்பில் அல்லது கூகல் டிரைவின் வழி kavimaalaisg@gmail.com என்ற மின்னஞ்சலுக்குப் பகிரலாம். 

இப்போட்டிகளில் பங்கேற்க அனுமதி இலவசம், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேல்விவரங்களுக்கு அழைக்க- 91461400

குறிப்புச் சொற்கள்