ஆதரவும் சுதந்திரமும் அளிக்கும் மாறுபட்ட உபகாரச் சம்பளத் திட்டம்

ஒரு துறையின் மீதான ஆர்வமும் உந்துதலும் வாழ்வைக் கட்டியெழுப்ப அடிப்படையானது என ஆழமாக நம்புபவர், வணிக நிறுவனத்தில் அனைத்துலகச் சந்தை இணக்க அதிகாரியாக பணியாற்றும் நா.நாச்சம்மை.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் கணக்கியல், வணிக மேலாண்மையில் இரட்டைப் பட்டம் வாங்கியவர் நாச்சம்மை.

கடந்த 2013ஆம் ஆண்டு சிறந்த மதிப்பெண்களுடன் மேல்நிலைக் கல்வியை முடித்த இவர், தனது கல்வித் திறனை மட்டுமே முன்னிறுத்தி, எவ்விதப் பிணைப்பும் இன்றி தன் இளங்கலைப் படிப்புக்கு முழு நிதியுதவி அளிக்கக்கூடிய உபகாரச் சம்பளத்தை நாடினார்.

தனது வாழ்க்கைப் பாதையை, திட்டமிட்டபடி அமைத்துக்கொள்ள தனக்கு ‘பிரைட் ஸ்பார்க்ஸ்’ மூலம் கிட்டிய பிணைப்பில்லா உபகாரச் சம்பளம் மிகவும் உதவியாக இருந்ததாகச் சொன்னார். இவ்வகை உபகாரச் சம்பளங்கள், விருப்பமான பணியையும் பாதையையும் தேர்வுசெய்ய முழு சுதந்திரம் அளிக்கும் என்றார்.

இந்தக் குறிப்பிட்ட உபகாரச் சம்பளம், வெளிநாடுகளில் கற்றல் அனுபவம், பல நிறுவன நிர்வாக அதிகாரிகளுடனான தொடர்பு ஆகிய அளப்பரிய வாய்ப்புகளைத் தனக்குக் கொடுத்ததாகவும் கூறினார்.

இந்த உபகாரச் சம்பளம் மூலம் ஜப்பான் நாட்டுக்கு வணிக ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, ‘டொயோட்டா’, ‘தோஷிபா’ உள்ளிட்ட பெருநிறுவனங்களைக் காண வாய்ப்பு கிடைத்ததாகக் கூறினார்.

மேலும், வெளிநாட்டு சமூக சேவைத் திட்டம் மூலம் இந்தியாவின் ஜெய்ப்பூர் நகருக்குச் சென்று இளையர்கள், பிற்படுத்தப்பட்ட பெண்கள் ஆகியோருக்குத் தொழில் பயிற்சி, நிதிக் கல்வியறிவு அமர்வுகளை நடத்தவும் வாய்ப்பு கிட்டியதைச் சுட்டிக்காட்டினார்.

எனவே, தற்போது மேல்நிலைத் தேர்வு முடிவுகளைப் பெற்று, மேற்படிப்பு குறித்த தேடலில் இருப்போர் வேலைச்சந்தை, ஆர்வம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ஆதரவளிக்கும் வகையிலான உபகாரச் சம்பளங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் நாச்சம்மை.

மேல்நிலை மாணவர்களின் கருத்துக்கள்

கல்வி, உபகாரச் சம்பளம் குறித்து ‘பிரைட் ஸ்பார்க்ஸ்’ நடத்திய ஆய்வின்படி, பெருமதிப்புமிக்க, அதிக நிதி நன்மைகள் உள்ள நிறுவனங்களைக் காட்டிலும் தனிப்பட்ட ஆர்வத்துக்குத் தீனி போடும் வகையில் அமைந்த நிறுவனங்களையே மாணவர்கள் தேர்வு செய்வர் எனப் பங்கேற்ற மாணவர்களில் 92 விழுக்காட்டினர் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், 48 விழுக்காட்டினர் உபகாரச் சம்பளத்துக்கு விண்ணப்பிப்பதற்கு, பிணைக்கப்படுவதை ஒரு பெரும் தடையாகக் கருதுகின்றனர் என்கிறது இந்த ஆய்வு.

தொடக்கக் கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களில் ஏறத்தாழ 80 விழுக்காட்டினர், உள்ளூர்ப் பல்கலைக்கழகங்களில் படிக்க விருப்பம் தெரிவித்தாலும் அதில் பாதிக்கும் மேற்பட்டோர், வெளிநாட்டுக் கல்வி நிலையங்களுடன் பரிமாற்றக் கொள்கைகள் கொண்ட பல்கலைக்கழகங்களைத் தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர்.

கடந்த ஆண்டைவிட குறைவான தொடக்கக் கல்லூரி மாணவர்களும் அதிகமான பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களும் லண்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்புக்குச் செல்ல விரும்புவதாகவும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!