சொல்லாடும் முன்றில் அமைப்பின் 12ஆவது கூடுகை ஜூலை 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஜூரோங் மேற்கு பொது நூலகத்தில் இடம்பெறவுள்ளது.
அந்நிகழ்வில் பங்குபெறும் சிறார்கள், ‘அம்மா, அப்பா, ஆசிரியர் சொல்லிக்கொடுத்த அறிவுரைகள்’ எனும் தலைப்பில் உரையாடலாம். வழக்கம்போல், பெரியவர்களுக்கான கவிதைப் போட்டியும் இடம்பெறும்.
சொல்லாடும் முன்றில் அமைப்பு, சிறார்களை ஆங்கிலம் கலக்காமல் பேசவைக்க ‘பிள்ளைத்தமிழ்’ பகுதி, பெரியவர்களுக்குக் கவிதைகள் எழுதும் போட்டி, நூலகத்தில் இருந்து ஒரு சிறுகதைத் தொகுப்பைத் தேர்வுசெய்து அறிமுகப்படுத்துதல், பார்வையாளர்களில் ஒருவர் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல், ஓவியங்களைக் காட்சிப்படுத்தி உரையாடுவதற்கென ‘வண்ணத்தமிழ்’ போன்ற அங்கங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
நிகழ்ச்சி பற்றிய மேல்விவரங்களுக்கு 82377006 என்ற எண்ணில் அல்லது sollaadummuntril@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வழியாகத் தொடர்புகொள்ளலாம்.