தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கதைக்களத்தில் ‘வேர்கள்’

2 mins read
608f5d96-aea3-450b-84e7-880ecc367027
படம்: - தமிழ் முரசு

எழுத்தாளர் நூர்ஜஹான் சுலைமானின் ‘வேர்கள்’ நூல் குறித்த கலந்துரையாடலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) மாலை 4 மணிக்கு நடக்கவிருக்கும் கதைக்களம் நிகழ்ச்சியில் நூல் குறித்த கலந்துரையாடல் இடம்பெறும். தேசிய நூலக வாரியத்தின் ஐந்தாம் தளத்திலுள்ள ‘பாசிபிலிட்டி’ அறையில் நிகழ்ச்சி இடம்பெறும்.

கதைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படவிருக்கின்றன.

செப்டம்பர் மாத நூல் அறிமுகப் போட்டிக்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நூலறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த நான்கு படைப்புகளுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.

மூன்று பிரிவுகளாக இடம்பெறும் செப்டம்பர் மாதச் சிறுகதைப் போட்டிக்கு எழுதுவதற்கான தொடக்க வரிகள்:

உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு (200 - 300 சொற்கள்): “ம்... அறுபது ஆண்டுகளுக்குமுன் நடந்ததை இப்ப நினைச்சாலும்...” தாத்தா யோசனையோடு என்னைப் பார்த்தார்.

இளையர் பிரிவு (300 - 400 சொற்கள்): “விருப்பமில்லை எனில் இப்போதே விலகிக்கொள்” என்ற குரல் கடுமையாக ஒலித்தது.

பொதுப்பிரிவு (400 - 500 சொற்கள்): ‘எங்குத் திரும்பினாலும் இயந்திரங்களாக இருக்கும் இடத்தில் இரவை எப்படிக் கழிப்பேன்?’ வியர்வை பெருகியது.

படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற மின்னியல் படிவத்தின் வழியாக 23/08/2024 வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேல்விவரங்களுக்கு: http://singaporetamilwriters.com/kathaikalam/, பிரதீபா வீரபாண்டியன் - 81420220, பிரேமா மகாலிங்கம் - 91696996.

குறிப்புச் சொற்கள்