தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கவிமாலையில் தொலைக்காட்சிப் புகழ் ஆதவன்

1 mins read
a6ab8c39-0b2d-46a7-b28a-8084e65246a7
சிறப்பு அங்கமாக தமிழ்மொழி விழாவில் கவிமாலையில் பரிசுகளை வென்ற மாணவர்களின் கவிதைகள் அரங்கேறவிருக்கின்றன. - படம்: கவிமாலை

கவிமாலை அமைப்பின் 300வது மாதாந்தரச் சந்திப்பு சனிக்கிழமை (மே 31) மாலை 5.30 மணிக்கு தேசிய நூலகத்தின் முதலாம் தளத்திலிருக்கும் விபிஆர் அறையில் நடைபெறவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின்மூலம் புகழ்பெற்று, சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து, பல்குரலில் பேசும் திறன்பெற்ற தஞ்சாவூரைச் சேர்ந்த திரு ஆதவனுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, சிறப்பு அங்கமாக தமிழ்மொழி விழாவில் கவிமாலையில் பரிசுகளை வென்ற மாணவர்களின் கவிதைகள் அரங்கேறவிருக்கின்றன. போட்டியின் நடுவர்களான மகேஷ்குமார், கி.கோவிந்தராசு இருவரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வர்.

‘காற்றுக்கென்ன வேலி” எனும் தலைப்பில் இம்மாதப் போட்டிக் கவிதைகள் வாசித்தல், கவிதை விமர்சனம், உரையாடல், பரிசளிப்பு ஆகிய வழக்கமான அங்கங்களும் இடம்பெறும்.

அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்