தியாக இரமேசின் ‘மனமது செம்மையானால்’ நூல் வெளியீட்டு விழா

1 mins read
10d82995-6104-45ad-b474-c41747c059f0
சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா. - படம்: கவிமாலை

சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் ஏற்பாட்டில் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவில் தியாக இரமேசின் ‘மனமது செம்மையானால்’ நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (ஜூலை 5) சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கவிமாலை காப்பாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் தலைமையுரை ஆற்றினார். முன்னதாக கவிமாலை தலைவர் கவிஞர் இன்பா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மக்கள் கழக நற்பணிப் பேரவை தலைவர் ரவீந்திரன் கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார்.

மாதவி இலக்கிய மன்றத்தின் மதியுரைஞர், மூத்த சமூகத் தலைவர் டாக்டர் என்.ஆர்.கோவிந்தன் நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். கவிமாலை துணைத் தலைவர் முனைவர் கி. திருமாறன் முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.

கவிஞர் சி.கருணாகரசு கவிஞரை வாழ்த்துப் பா வாசிக்க, கவிஞர் தேன்மொழி அசோக் நூலாசிரியரின் ‘மரப்பாச்சிப் பொம்மைகள்’ கவிதைத் தொகுப்பில் இருந்து ‘தமிழே! தமிழே!’ என்ற கவிதையை பாடலாக பாடினார்.

மாணவர் பார்வையில் செல்வி மீரா ஜெயக்குமார் கவிதைகளைப் பற்றி கருத்துரை வழங்கினார்.

ஞாலம் பதிப்பக நிறுவனர் பேராசிரியர் ஞால.ரவிச்சந்திரன் நூலாய்வுசெய்து பதிப்பாசிரியர் உரையாற்றினார்.

சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா.
சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா. - படம்: கவிமாலை

கவிஞர் லலிதா சுந்தர் நிகழ்ச்சி நெறியாளராக விளங்கினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக நூலாசிரியர் கவிஞர் தியாக இரமேஸ் நன்றியுரை நவின்றார்.

சான்றோர், படைப்பாளிகள், அமைப்புத் தலைவர்கள், இலக்கிய ஆர்வலர்கள், நட்பின் உறவுகள் சூழ இரவு உணவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

குறிப்புச் சொற்கள்