முனைவர் இராஜிக்கண்ணுவின் மூன்று நூல்கள் வெளியீடு

1 mins read
8a6a4a66-ecd8-4ef9-b010-0c068c55c733
வெளியீடு கண்ட நூல்கள். - படம்: மா. இராஜிக்கண்ணு
multi-img1 of 2

முனைவர் மா இராஜிக்கண்ணுவின் நெஞ்சிலாடும் நினைவலைகள், கவிதை அரும்பு, சுயமரியாதைச் சுடரொளி மானமிகு சே நடராசன் ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா பிப்ரவரி 15ஆம் தேதி நடந்தேறியது.

விக்டோரியா ஸ்திரீட்டில் அமைந்துள்ள தேசிய நூலகத்தின் பாசிபிலிட்டி அறையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பேராசிரியர் அ வீரமணி காணொளி வாயிலாக நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். தேசியக் கல்விக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் இணைப் பேராசிரியை சீதாலட்சுமி தலைமையுரை ஆற்றினார்.

நெஞ்சிலாடும் நினைவலைகள் நூல் குறித்து முனைவர் கி. திருமாறனும், சுயமரியாதைச் சுடரொளி மானமிகு சே நடராசன் நூல் குறித்து சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத் தலைவர் க. பூபாலனும் ஆய்வுரை ஆற்றினர்.

குறிப்புச் சொற்கள்