சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையை ஊக்குவித்த ‘விஷன் 21’ ஆரோக்கிய விழா 2025

1 mins read
b58a689e-cc9a-4353-a1ed-69b8e6b2257f
அனைத்து வயதுடைய பங்கேற்பாளர்களை ஈடுபடுத்துவதன் மூலம் இந்த நடனப்பயிற்சி சுறுசுறுப்பான வாழ்க்கை முறைகளையும் குடும்பப் பிணைப்பையும் ஊக்குவித்தது. - படம்: ‘விஷன் 21’ அறநிறுவனம்

கிட்டத்தட்ட 800 பேர் அக்டோபர் 5ஆம் தேதி ஒன்றுகூடி ஒரு மாபெரும் நடனப்பயிற்சி மேற்கொண்டார்கள்.

‘ஆக்டிவ் எஸ்ஜி’ விளையாட்டு இயக்கம், ‘ஸ்போர்ட்எஸ்ஜி’ அமைப்பு, சுகாதார மேம்பாட்டு வாரியம், தேசிய இளையர் மன்றம் ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்ட ‘விஷன் 21’ ஆரோக்கிய விழாவின் ஒரு பகுதியாக இந்த நடனப்பயிற்சி நடைபெற்றது.

அனைத்து வயதுடைய பங்கேற்பாளர்களையும் ஈடுபடுத்துவதன் மூலம் இந்த நடனப்பயிற்சி சுறுசுறுப்பான வாழ்க்கை முறையையும் குடும்பப் பிணைப்பையும் ஊக்குவித்தது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம், ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்லினா அப்துல் ஹலிம் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக ‘விஷன் 21’ ஆரோக்கிய விழாவில் கலந்துகொண்டனர்.

குடும்பங்களுக்கு இலவச மளிகைப் பொருள்களையும் வழங்கினார் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம்.
குடும்பங்களுக்கு இலவச மளிகைப் பொருள்களையும் வழங்கினார் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம். - படங்கள்: ‘விஷன் 21’ அறநிறுவனம் 

நடனப்பயிற்சி தவிர சிங்கப்பூர் புற்றுநோய் சங்கத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் பரிசோதனை, வசதிகுறைந்த குடும்பங்களுக்கு இலவச மளிகைப் பொருள்களை வழங்கும் சிறிய தற்காலிகக் கடையும் விழாவில் இடம்பெற்றன.

நடனப்பயிற்சியில் கலந்துகொண்டு குடும்பங்களுக்கு இலவச மளிகைப் பொருள்களை வழங்கினார் திரு ஸுல்கர்னைன்.

‘V21 காற்பந்து கிண்ணம்’ விளையாட்டுகளுக்கு நடுவராகவும் பொறுப்பேற்றார் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்லினா அப்துல் ஹலிம்.
‘V21 காற்பந்து கிண்ணம்’ விளையாட்டுகளுக்கு நடுவராகவும் பொறுப்பேற்றார் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்லினா அப்துல் ஹலிம். - படங்கள்: ‘விஷன் 21’ அறநிறுவனம் 

மேலும் பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் ஆலயங்களைச் சேர்ந்த காற்பந்து வீரர்கள் ‘V21 காற்பந்துக் கிண்ணம்’ விளையாட்டில் ஒன்றுசேர்ந்தனர்.

விளையாட்டுவழி சமய நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் நட்பு போன்ற பண்புகளை இந்தக் காற்பந்தாட்டம் ஊக்குவித்தது.

‘V21 காற்பந்துக் கிண்ண’ விளையாட்டுகளுக்கு நடுவராகப் பொறுப்பேற்றார் திருவாட்டி ஹஸ்லினா.

குறிப்புச் சொற்கள்