தமிழ்மொழி விழாவின் அங்கமாக கவிமாலை அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியில், தமிழ்த் திரைப்பட நடிகை நீலிமா இசை நாயகியாக நடிக்கும் ‘யாப்பு’ எனும் காரிகை வரலாற்றுச் சிறப்பு புனைவு நாடகம் இடம்பெற இருக்கிறது.
மூத்த படைப்பாளருக்கான கணையாழி விருது, சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான விருது, சிறந்த கவிஞருக்கான தங்கமுத்திரை விருது, கவிதைப் பயிலரங்கிலும் தமிழ்மொழி விழா கவிமாலைப் போட்டிகளிலும் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு என விருதுகளும் விருதாளர்களும் மேடையை அலங்கரிக்கவிருக்கின்றனர்.
உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருக்கிறார்.
நாள்: மே 4, ஞாயிறு
நேரம்: மாலை 5.30 மணி
இடம்: Fut Sing Hall, 2 Allenby Road, Level 02-01, Singapore 209973.
ஆர்வமுள்ளோர் tinyurl.com/kavisg எனும் இணையப்பக்கம் வழியாகத் தங்கள் வருகையைப் பதிவுசெய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அனுமதி இலவசம்