நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்

2 mins read
2f3c8fe6-7cca-423e-b517-2a148d05b29d
கவிஞர் கண்ணதாசன் - படம்: தேசிய நூலக வாரியம்

தலைப்பு: கவிஞர் கண்ணதாசனின் இலக்கியப் பேருரைகள்

நூலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

பதிப்பாளர்: சென்னை : கண்ணதாசன் பதிப்பகம், 2018.

குறியீட்டு எண்: 894.8117109 KAN

அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.

கவிஞர் கண்ணதாசன் பல ஊர்களில் வெவ்வேறு ஆண்டுகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்த நூல். இருபது தலைப்புகளைக் கொண்ட இந்த நூலில், பல நல்ல கருத்துகளும் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.  

இருபதாம் நூற்றாண்டில் தமிழைத் தூக்கிப் பிடித்த பாரதியாரையும் பாரதிதாசனையும் போற்றுகிறார் கவிஞர்.

தமிழ் மக்களுக்குத் தமிழ் மொழியின் உயரிய நூல்களைப் பற்றித் தெரியாமல் போய்விட்டது என்பதும் அவரது ஆதங்கமாக இருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

கிராமங்களில் பாடப்படும் பாடல்களைப் பற்றி சென்னை வானொலியில் ஆற்றிய உரை, மாணவ மன்றங்களில் ஆற்றிய சொற்பொழிவுகள், கலைஞர் கருணாநிதியின் ரோமாபுரிப் பாண்டியன் நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை, கலைவாணர் நினைவேந்தலில் ஆற்றிய உரை என பல தொகுப்புகளை உள்ளடக்கியது இந்நூல். 

ஒருவரின் பெருமை உற்றாருக்கு தெரிவதைவிட மற்றவருக்குத்தான் அதிகம் தெரியும் என்கிறார். தாமரை மலரில் தேன் இருப்பது எங்கோ இருக்கிற வண்டுக்குத்தான் தெரிகிறதே தவிர குளத்திலேயே இருக்கிற தவளைக்குத் தெரிவதில்லை என்று மேற்கோள் காட்டுகிறார் கவிஞர். 

உலகம் இவ்வளவுதான் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றியுள்ள கவிஞர், வாழ்க்கையில் எதையும் அச்சமும் தயக்கமுமின்றி அனுபவித்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். 

‘கவிஞர்’ என்ற அடைமொழியைக் கலைஞர் கருணாநிதிதான் வழங்கினார் என்ற செய்தியையும் குறிப்பிடுகிறார். 

பட்டினத்தாரைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்வதோடு, கவிஞரின் ‘வீடு வரை உறவு வீதி வரை மனைவி’ திரைப்படப்பாடல் பட்டினத்தாரின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதபட்டதாகக் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவின் டெட்ராயிட் தமிழ்ச் சங்கத்தில் ஆற்றிய கடைசிச் சொற்பொழிவும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.

நகைச்சுவையுடன் கருத்துக்களையும் எடுத்துரைக்கும் வகையில் சொற்பொழிவுகள் அமைந்துள்ளதை வாசகர்கள் உணர்வார்கள்.

- தேசிய நூலக வாரியத்துக்காக, க நெடுஞ்செழியன்

நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg

குறிப்புச் சொற்கள்