தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமரர் சுப. அருணாசலம் நினைவு பாடல் போட்டி

1 mins read
e9ea6f5c-9885-414b-b574-2a5af907a617
படம்: - தமிழ் முரசு

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் அமரர் சுப. அருணாசலம் நினைவாக ‘சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி’ ஒன்றுக்குக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

பாடல் எழுதுவதற்கான சூழல் இதுதான்: சிங்கப்பூரர்கள் வீட்டில் சமைத்துச் சாப்பிடுவதைவிட வெளியில் சென்று சாப்பிடுவதை அதிகம் விரும்புகின்றவர்கள். மேலும், சிங்கப்பூர் பல இன நாகரிகங்கள் சங்கமிக்கும் ஒரு நகரம். அதனால், இங்கு விதவிதமான பலநாட்டு உணவுவகைகள் கிடைக்கும். அவற்றைப் பற்றி பாடல் எழுத வேண்டும். பாடல் நகைச்சுவையாகக்கூட இருக்கலாம்.

பாடல் ஒருவர் பாடுவதாக அமைந்திருக்க வேண்டும். ஒரு பல்லவியும் மூன்று சரணங்களும் இருக்க வேண்டும். ஒவ்வொன்றும் நான்கு வரிகள் என, மொத்தம் 16 வரிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஒருவர் மூன்று பாடல்கள்வரை அனுப்பலாம்.

https://singaporetamilwriters.com/suba எனும் இணைப்பு மூலம் கூகல் படிவத்திற்குச் சென்று, அதனை நிரப்பி, பாடல்களுடன் அனுப்ப வேண்டிய இறுதி நாள் 30.09.2023.

மேல்விவரங்களுக்கு: நா. ஆண்டியப்பன் –- 97849105; சு. முத்துமாணிக்கம் - – 96753215; பிரேமா மகாலிங்கம் - – 91696996; கோ. இளங்கோவன் - – 91216494 ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம். அல்லது www.singaporetamilwriters.com இணையத்தளத்தை நாடலாம்.

நடுவர்களால் தெரிவு செய்யப்படும் மூன்று பாடல்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்: முதல் பரிசு $300; இரண்டாம் பரிசு $250; மூன்றாம் பரிசு $150.

முதல் பரிசு பெறும் பாடல் இசையமைக்கப்பட்டு கண்ணதாசன் விழாவில் ஒலிபரப்பப்படும்.

குறிப்புச் சொற்கள்