நூல் அறிமுகம்

2 mins read
e16e30a0-6154-48b9-b7a4-b8dc8f7a57fb
தலைப்பு: அரிதாரம் : சிறுகதைத் தொகுப்பு  - படம்: தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர்

தலைப்பு: அரிதாரம் : சிறுகதைத் தொகுப்பு நூலாசிரியர்: முஹைதீன் நிசார் அன்வர் பதிப்பாளர்: சிங்கப்பூர் : முஹைதீன் நிசார் அன்வர், 2017. குறியீட்டு எண்: SING S894.811372 MOH அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.

பதின்மூன்று சிறுகதைகளின் தொகுப்பு. ‘மரக்கதவுகள்’, ‘தூண்டில் புழு’, ‘அறுவடைப் பூக்கள்’ ஆகிய மூன்று கதைகளும் தமிழ் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பற்றியதாக உள்ளது. ‘மரக்கதவுகள்’ கதையில் ஆசிரியர் தன்னிடமிருந்து விடைபெறும் உயர்நிலை நான்கு மாணவர்களுக்கு மதிப்பெண்களையும் தாண்டி வெளி உலகத்தில் அவர்கள் சந்திக்கவிருக்கும் சவால்களைப் பற்றி பேசுகிறார்.

மேலும், தாய்மொழியான தமிழை வாழும் மொழியாக்க வேண்டிய கடமையை வலியுறுத்தி ஒட்டுமொத்த தமிழாசிரியர்களின் விருப்பத்தை அவர் கூறியிருப்பது அருமை.

‘தூண்டில் புழு’ கதையில் முன்னால் தமிழாசிரியரான தாத்தா பேரனிடம், மாணவர்கள் ஆசிரியர்களை வெறுத்தாலும், ஆசிரியர்கள் கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருந்தால் ஒரு நாள் மாணவர்கள் புரிந்து கொள்வார்கள் என்கிறார். அனுபவமே சிறந்த வாழ்க்கைப்பாடம் என்பதையும் தாத்தா என்ற பல்கலைக்கழகம் மூலம் அறிந்து[Ϟ]கொள்கிறார் பேரன்.

‘மறுபிறவி’ கதையில் அமைதியைத் தேடி சிங்கப்பூரிலிருந்து மெல்பர்ன் செல்பவர் ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்ற உயரிய பாடத்தைக் கற்றுக் கொள்கிறார். ‘இரண்டு வெள்ளி’ கதை மிகவும் நகைச்சுவையாக உள்ளது. ‘கயல்விழி’, ‘அட்சதை’ ஆகிய இரு கதைகளின் முடிவுகளும் எதிர்பாரா திருப்பமாக அமைகின்றன.

ஆசிரியர் கதைகளை மிகவும் எளிய சொல்நடையில் எழுதியிருப்பதால் நம் அனைவருடைய மனத்தையும் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

தேசிய நூலக வாரியத்துக்காக, பெ. கீதா.

நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg

குறிப்புச் சொற்கள்