நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்

1 mins read
fdce9603-5aab-4c01-b7b2-7a2076bbd113
நகரெங்கும் சிதறிய சுழிகள் - தேசிய நூலக வாரியம்

தலைப்பு: நகரெங்கும் சிதறிய சுழிகள்

ஆசிரியர்: ஜெயந்தி சங்கர்

பதிப்பாளர்: வம்சி புக்ஸ், 2016. 

குறியீட்டு எண்: Sing JAY

அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.

இத்தொகுப்பில் உள்ள பதினொரு சிறுகதைகளும் வெவ்வேறு களங்களையும் மனித உணர்வுகளையும் உள்ளடக்கி எழுதப்பட்டு இருக்கின்றன. வேலையிடங்களிலும் வெளியிடங்களிலும் பெண்கள் எதிர்கொள்கின்ற அசௌகரியங்களை வெளிப்படுத்தும் வகையில் இச்சிறுகதைகளின் பெண் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டு இருப்பது இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பு.

‘வார்ட் 34 பி’ எனும் கதையில், ஒரு தவறுதலான புரிதலால் மனநல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கவிதா எனும் பெண்ணின் வாழ்க்கையில் விதி எவ்வாறெல்லாம் சதுரங்கமாடியிருக்கிறது என்பதை சதுரங்கக் காய்களை வைத்தே துல்லியமாக நகர்த்திச் செல்கிறார் எழுத்தாளர். 

தன்னுடைய கை அணைப்பிலேயே தூங்கும் மகனைப் பிரிந்து சிங்கப்பூர் செல்லும் தாய் மீண்டும் தாய்நாடு திரும்பும்போது மகனுக்கும் அவளுக்கும் இருந்த பிணைப்பு என்னவாகிறது என்பதைச் சொல்லிச் செல்கிறது ‘கை’ எனும் சிறுகதை. 

தொடர்புடைய செய்திகள்

இத்தொகுப்பின் தலைப்புக் கதையான ‘நகரெங்கும் சிதறிய சுழிகள்’ கதையில் அச்சுப்பிழையின் காரணமாக அடிக்கப்பட்ட ஒரு சுழி, அதாவது பூச்சியம், தப்பியோடி இந்நகரமெங்கும் உள்ள மக்களிடம் சென்று சேர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவையும் கற்பனையும் கலந்து சொல்லியிருக்கிறார் எழுத்தாளர். 

நகரெங்கும் சிதறிய சுழிகள் உலகெங்கும் சிதறிக் கிடக்கின்ற மனிதர்களின் வாழ்வின் பூதக்கண்ணாடி.

 - தேசிய நூலக வாரியத்துக்காக ஹம்சாரிணி தவகணேஸ்

இந்த நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg

குறிப்புச் சொற்கள்